Crime :சுற்றுலா பயணிக்கு நிகழ்ந்த வன்கொடுமை.. சாதாரண சட்டப்பிரிவில் கைது செய்த போலீஸ்.. குவியும் கண்டனங்கள்..
பாகிஸ்தானில் அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை சாதாரண பிரிவில் கைது செய்த போலீசுக்கு கடும் கண்டனங்கள் உலகளவில் குவிந்து வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த 21 வயதான பெண் சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படுபவர். அமெரிக்க - ஜெர்மன் தம்பதிக்கு பிறந்த இவர் யூ டியூப்பில் சேனலும், பேஸ்புக்கில் தனக்கென்று பக்கத்தையும் வைத்துள்ளார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு சுற்றுலா விசா மூலம் வந்துள்ளார்.
தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள வீடியோ லாகராக அந்த பெண் இருந்து வந்துள்ளார். பாகிஸ்தானிலும் உள்ள ஒவ்வொரு பகுதிகளையும் வீடியோவாக தனது யூ டியூப் மற்றும் பேஸ்புக் மூலமாக பதிவிட்டு வந்துள்ளார்.
அவர் பாகிஸ்தானில் உள்ள மலைப்பகுதியான போர்ட் மோன்ரோவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். அவருக்கு உதவி புரிவதற்காக அவருடைய சமூக வலைதள நண்பர்கள் முசாமில் சிப்ரா மற்றும் அசான்கோசா இருவரும் ஒத்துழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி அந்த அமெரிக்க – ஜெர்மன் வீடியோ லாகர் பெண்ணை முசாமில் சிப்ரா, அசான்கோசா உள்ளிட்ட சிலர் இணைந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தினால் பேரதிர்ச்சி அடைந்த அந்த பெண் போர்ட் மோன்ரோ காவல் நிலையத்தில் பகார் அளித்தார்.
அந்த காவல்நிலையத்தில் பாகிஸ்தானின் சட்டப்பிரிவான 376 மற்றும் 292பி பிரிவின் கீழ் மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சட்டப்பிரிவானது சாதாரண குற்ற நடவடிக்கைகளுக்காத தண்டனைப் பிரிவாகும். முக்கிய குற்றவாளியான முசாமில் சிப்ராவை அந்த நாட்டின் ராஜன்புரில் கைது செய்த அந்த நாட்டு போலீசார் இந்த பிரிவின் கீழ் கைது செய்திருப்பதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
சில பாகிஸ்தானியர்கள் நாடு தற்போதுள்ள நிலையில் பாகிஸ்தானியர்களுக்கே பாதுகாப்பு இல்லை, வெளிநாட்டவருக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்திற்கு அமெரிக்க தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால், பாகிஸ்தான் அரசு குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
மேலும் படிக்க : Sri Lankan protest: இலங்கையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல்; மனித உரிமை ஆணையம் கண்டனம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்