ஆவி பெயரை வைத்து மிரட்டி 6 மாதம் பாலியல் வன்கொடுமை - போலிச் சாமியாருக்கு போலீஸ் வலை
அந்த நபர் வாரத்திற்கு இரண்டு முறை பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் செல்வார். சடங்குகளின் போது குடும்பத்தினர் தனித்தனி அறைகளில் தங்க வேண்டும் என்று அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் நம்ப வைத்தார்.
தீய சக்திகளை வீட்டிலிருந்து விரட்டுவது போல் நடித்து சிறுமியை 6 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 30 வயது பழ வியாபாரி ஒருவர், 10ஆம் வகுப்பு மாணவியை வீட்டில் இருந்து தீய சக்திகளை விரட்டும் சடங்குகளை நடத்துவது போல் நடித்து, ஆறு மாதங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நிஹால் பேக், சிறுமியின் வீட்டிற்கு சிறப்பு பிரார்த்தனை செய்ய வந்தபோது, குடும்பத்தினரை நம்பவைத்ததால், சிறுமியை முதலில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை எலக்ட்ரானிக் கேஜெட்களை வியாபாரம் செய்தவர். அவரது தாயார் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். கொரோனா ஊரடங்கால் அவரது தந்தையின் வணிகம் நஷ்டமடைந்தது. இதனால் அவர் மன அழுத்தத்திற்கு ஆளானார். இந்த நிலையில், அந்தக் குடும்பத்திற்கு அறிமுகமான நிஹால் பேக், அவர்களின் இந்த நிலைமைக்கு துரதிர்ஷ்டத்தின் பின்னணியில் ஒரு தீய ஆவி இருப்பதாகவும், அது தடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அந்த நபர் வாரத்திற்கு இரண்டு முறை பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் செல்வார். சடங்குகளின் போது குடும்பத்தினர் தனித்தனி அறைகளில் தங்க வேண்டும் என்று அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் நம்பவைத்தார். இதன்பிறகு, தன்னுடன் உடலுறவு கொள்ள அனுமதிக்காவிட்டால், ஆவி பெற்றோரைக் கொல்லக்கூடும் என்று சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அந்த நபர் தான் ஆவியை விரட்டியதாகவும், மீண்டும் வீட்டிற்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் சிறுமி தைரியத்தை சேகரித்து, தனது பெற்றோருக்கு நடந்ததை கூறினார். அதன் பிறகு அவர்கள் காவல்துறையை அணுகினர். இந்தப் புகாரின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்