Crime : வன்முறை.. நடு இரவில் அரை நிர்வாணமாக காதலியை வெளியில் துரத்தி கொடூரம்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தன்னுடைய காதலியை நடு இரவில் அரை நிர்வாணமாக வெளியே அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மேலும் ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது. அதன்படி ஒருவர் தன்னுடைய காதலியை நடுஇரவில் அரை நிர்வாணமாக வீட்டை விட்டு வெளியே அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமுகை பகுதியில் கே.உதயக்குமார்(45) என்ற நபர் வசித்து வந்துள்ளார். இவருடன் ஓடிசாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் இவருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை. இருப்பினும் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். உதயக்குமார் நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இதனால் அவருடைய வீட்டிலும் ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உதயக்குமாருக்கும் அவருடைய காதலிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்தச் சண்டை பெரிய வாக்குவாதமாக மாறியுள்ளது. இந்தச் சண்டைக்கு பின்பு ஆத்திரம் அடைந்த உதயக்குமார் தன்னுடைய காதலியை அரை நிர்வாணமாக நடு இரவில் வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் அருகே இருந்த வீட்டில் இருந்த பெண்களிடம் உதவியை நாடியுள்ளார். பக்கத்து வீட்டில் இருந்த பெண்கள் அப்பெண்ணிற்கு உதவியுள்ளனர். அத்துடன் உதயக்குமாரை தட்டி கேட்க சென்றுள்ளனர்.
அப்போது அவர்களிடன் தவறாக பேசிய உதயக்குமார் தன்னுடைய நாயை ஏவி விட்டு அவர்களை கடிக்க வைத்துள்ளார். அதன்பின்னர் உதயக்குமாரின் பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வந்து உதயக்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது குடும்ப வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடன் தங்கிய இருந்த பெண் நடுஇரவில் ஒருவர் அரை நிர்வானமாக வெளியே அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க:ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவி... 4 மாத கர்ப்பம்... 2 வயது கைக்குழந்தை..கொன்று எரித்த சைக்கோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்