காதல் விவகாரத்தில் மகன் மற்றும் தந்தை மீது கொலைவெறி தாக்குதல் - மயிலாடுதுறையில் பரபரப்பு
மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து தரச் சொல்லி கேட்ட இளைஞர் மீது தாக்கி, தடுக்க சென்ற தந்தையை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து தரச் சொல்லி கேட்ட இளைஞர் மீது தாக்கி, தடுக்க சென்ற தந்தையை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் ஊராட்சி கொற்றவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதான தியானேஸ்வரன். இவர் சென்னையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த அன்பரசன் என்பவரின் சித்தப்பாவின் மகளும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் கொடுக்க பெண் வீட்டார் ஒத்துக் கொண்டுள்ளனர்.
Actor Suriya: டி10 கிரிக்கெட்டில் சென்னை அணியின் உரிமையாளரான நடிகர் சூர்யா; ரசிகர்கள் மகிழ்ச்சி
ஆனால், தினேஸ்வரனின் நடவடிக்கைகள் பிடிக்காததால், திருமணம் செய்து வைக்காமல் காலதாமதப்படுத்தியுள்ளனர். இதனால், தியானேஸ்வரன் குடும்பத்தினர் கடந்த ஆறு மாதமாக அன்பரசனின் குடும்பத்தினரிடம் பெண் கேட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக ஊருக்கு வந்த தியானேஸ்வரன், அன்பரசன் சித்தப்பாவின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. அன்பரசன் மற்றும் அவரது சகோதரர்களான அகஸ்டின், வேல்முருகன், சங்கர் ஆகியோர் ஒன்று சேர்ந்து தியானேஸ்வரனை தாக்கியுள்ளனர்.
இதனை தடுக்க சென்ற அவரது தந்தை சந்திரசேகரனை அரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் சந்திரசேகரனுக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து சந்திரசேகரனை தாக்கியவர்கள் அங்கே இருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து சந்திரசேகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் ஆறு தையல் போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த தியானேஸ்வரனை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.