Governor RN Ravi: நள்ளிரவில் திடீரென பரவிய வாயு.. பொதுமக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம் - ஆளுநர் ரவி கவலை..!
வாயு கசிவு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கவலையை ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டார்.
சென்னை எண்ணூரில் உள்ள கொரமண்டல் உரத் தொழிற்சாலையில் இரவு 12 மணியளவில் அம்மோனிய கசிவால் தொழிற்சாலை அருகில் உள்ள மீனவர்கள் வசிக்கும் பெரிய குப்பம், சின்ன குப்பம், எர்ணாவூர் குப்பம், அன்னை சிவகாமி நகர் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அருகில் இருந்த உறவினர்களிம் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர் மேலும், சிலர் திருமண மண்டபங்கள் மற்றும் சாலைகளின் ஓரத்தில் அமர்ந்திருந்தனர்.
தொடர்ந்து, இந்த அமோனியா கசிவால் சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொழிற்சாலை நிர்வாகம் அமோனியா கசிவை சரி செய்து விட்டதாகவும் இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவுறுத்திய நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
சம்பவ இடத்திற்கு எண்ணூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் வந்து தொழிற்சாலை நிர்வாகிகளிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில், வாயு கசிவு குறித்து ஆளுநர் மாளிகை ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஆளுநர் ரவி அவர்கள், வடசென்னை எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயுசசிவு சம்பவம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததோடு, அதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆளுநர் ரவி அவர்கள், வடசென்னை எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான #வாயுகசிவு சம்பவம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததோடு, அதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.@PMOIndia @HMOIndia @pibchennai @DDNewsChennai @airnews_Chennai
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 27, 2023
அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்:
சென்னை திருவொற்றியூர் அஜாக்சில் ஆகாஷ் அமோனியா கசிவில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி பின்னர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ நேற்று இரவு தொழிற்சாலையில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு அக்கம் பக்கத்தில் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற உபவாதைகள் ஏற்பட்டது. உடனடியாக பொதுமக்கள் சுகாதாரத்துறை தொடர்பு கொண்ட அடிப்படையில் 16 ஆம்புலன்ஸ் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களை நேரடியாக சந்தித்து சிகிச்சை பற்றி கேட்டறிந்தேன். எல்லோரும் நலமுடன் இருக்கிறார்கள்.
அதேபோல் ஆகாஷ் மருத்துவமனையில் நேற்று இரவு முதல் பல்வேறு உபவாதைகளால் பாதிக்க பட்டவர்களை அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை பற்றி கேட்டு அறிந்தேன். மேலும் நானும், சுதர்சனம் எம்.எல்.ஏ., சங்கர் எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் நேரடியாக போய் பார்த்து நலம் விசாரித்தும்.
அவர்களுக்கான கண் எரிச்சல் தேவையான சிகிச்சை பற்றி கேட்டறிந்தேன். அதோட மட்டும் அல்லாமல் சென்னை மாநகராட்சியும் மக்கள் நலத்துறை ஒருங்கிணைந்து மருத்துவ முகாமையும் பெரிய குப்பம் பகுதியில் மாநகராட்சி பள்ளியில் முகாமை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
36 பேர் ஆகாஷ் மருத்துவமனையில், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 6 பேர், என மொத்தம் 42 பேருமே நலமுடன் இருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் வீடுகளுக்கு திரும்புவார்கள். இது சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உடனடியாக முதல் அமைச்சர் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். காவல்துறை இரவு நேரமாக மீட்பு பணிகள் நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். யாருக்கும் எந்த வித பெரிய பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்து இருக்கிறார்கள்.
ஐ.சி.யு. யாரும் இல்லை தீவிரவாதிப்பு இல்லை. ஸ்டான்லியில் உள்ள 3 குழந்தைகள் காலையில் காலை உணவு சாப்பிட்டிருக்கிறார்கள் எல்லோரும் நலமுடன் இருக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் உடைய மருத்துவ செலவு முழுவதும் அரசாங்கம் ஏற்றிக்கொள்ளும். ஒரு ரூபாய் கூட பொதுமக்கள் எனமிருந்து வாங்க கூடாது என்று மருத்துவ நிர்வாகத்திடம் கூறியுள்ளோம். மேலும் பொதுமக்களிடம் ஒரு ரூபாய் கூடாது வாங்க கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறோம். தொழிற்சாலை சம்பந்தமாக அந்த துறை அமைச்சர் பேசி ஆய்வு மேற்கொண்டு இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்.” என தெரிவித்தார்.