மேலும் அறிய
Advertisement
இன்ஸ்டா காதலியின் முன்னாள் காதலனை கடத்திச் சென்று போதை கும்பலுடன் தாக்கிய வாலிபர் கைது!
இன்ஸ்டா காதலியின் முன்னாள் காதலனை தாக்கி வாலிபர் சிறைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் போதை கும்பல் ஒன்று வாலிபர் ஒருவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கும் பரபரப்பு வீடியோ ஒன்று வெளிவந்தது. தாக்குதலுக்கு உள்ளான அந்த வாலிபர் யார்? அவரை தாக்கிய போதை கும்பலுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என விசாரித்து நடவடிக்கையில் எடுக்க காவல் துறை களம் இறங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் , டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைத்தும் உத்தரவிட்டார்.
உத்தரவின் பேரில் விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார் தாக்குதலுக்கு உள்ளான கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்த 19-வயதான கல்லூரி மாணவன் ஷைஜூ பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஷைஜூக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் வாகவிளை பகுதியை சேர்ந்த அதுல்யா என்ற கல்லூரி மாணவிக்கும் ஒரு வருடத்திற்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாவில் பழகி காதலை வளர்த்து கொண்ட அதுல்யா வசதி படைத்தவர் என்பதால் ஷைஜூ அதுல்யாவிடம் தனக்கு அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கூறி அவருடைய நகைகளை கழற்றி வாங்கியதாக தெரிகிறது.
அதற்கு பின் ஷைஜூ அதுல்யா உடனான தொடர்பை முற்றுலுமாக துண்டித்த நிலையில் பலமுறை அதுல்யா செல்போனில் தொடர்பு கொண்டும் ஷைஜூ கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் அதுல்யா விற்கு மீண்டும் இன்ஸ்டா மூலம் கருங்கல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கடந்த மாதம் சதீஷ்குமார் ஐ தொடர்பு கொண்ட அதுல்யா பள்ளியாடி அருகே உள்ள தேனீர் கடைக்கு வரவழைத்து ஷைஜு வை காதலிததை மறைத்து சதீஷ் குமாரை காதலிப்பதாக கூறியுள்ளார் .
மேலும் சதீஷ்குமாரிடம் ஷைஜு தனது நண்பர் என்று கூறிய அதுல்யா ஷைஜு 4-சவரன் தங்க நகைகளை ஏமாற்றி வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். நகைகளை திருப்பி கேட்டு எனக்கு சதீஷ்குமாரிடம் இருந்து நெருக்கடி வரவே அதுல்யாவின் தாயிடம் அவரின் இரண்டாவது காதலை தான் போட்டுடைத்ததாகவும் தெரிகிறது. இதை அதுல்யா கண்ணீர் மல்க சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
காதலியின் கண்ணீரை கண்ட சதீஷ்குமார் அவரை ஆறுதல் கூறி அனுப்பி வைத்ததோடு கடந்த மாதம் 20-ம் தேதி அவரது நண்பர் மூலம் ஷைஜு வை அழைத்து கடத்தி சென்று மண்டைக்காடு பகுதியில் உள்ள இடுகாட்டில் வைத்து தனது போதை நண்பர்களுடன் சேர்ந்து ஷைஜு வை சரமாரியாக தாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அதுல்யாவிடம் விசாரணை நடத்திய மண்டைக்காடு போலீசார் சம்பவம் உண்மை என தெரியவரவே ஷைஜூ அளித்த புகாரின் பேரில் அதுல்யாவின் இரண்டாவது இன்ஸ்டா காதலன் சதீஷ்குமார், அவரது நண்பர்கள் ஆனந்தராஜ்., விஷ்ணு., சஞ்ஜய்., ராகுல் ஆகிய 5-பேர் மீது வழக்கு பதிவு செய்ததோடு அதுல்யாவின் இரண்டாவது காதலன் சதீஷ்குமார்., அவரது நண்பர் ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர் மேலும் தலைமறைவாக இருக்கும் மூன்று பேரை தேடி வருகின்றனர். இன்ஸ்டா காதலியின் முன்னாள் காதலனை தாக்கி வாலிபர் சிறைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
செய்திகள்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion