மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மகாராஷ்டிரா மாநிலம் பர்பணி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குண்ட்லிக் உத்தம் காலே. 32 வயது. இவரது மனைவி மைனா.
மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை தீவைத்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். இதனால் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பர்பணி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குண்ட்லிக் உத்தம் காலே. 32 வயது. இவரது மனைவி மைனா. இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை கணவர் குண்ட்லிக் உத்தம் காலே விற்கு இருந்ததாக தெரிகிறது. ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் அடைந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சினை வந்ததாக தெரிகிறது.
அதேபோல் கடந்த 26ஆம் தேதி இரவும் கணவன் மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த உத்தம் காலே தனது மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதில் மனைவி துடிதுடித்து கத்தியவாறு வீடு முழுவதும் ஓடியுள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் தீ அவரது உடல் முழுவதும் பரவி தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் போகும் வழியில் உயிரிழந்தார்.
இதையடுத்து மைனாவின் சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் உத்தம் காலேவை கைது செய்தனர். மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் கணவனே மனைவியை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.