மேலும் அறிய
Advertisement
Crime: உசிலம்பட்டி அருகே சுடுகாட்டில் பணத்துடன் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு..!
உடலின் அருகே மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டி மற்றும் ரூ.40 ஆயிரம் மதிக்கத்தக்க 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் காணப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
உசிலம்பட்டி அருகே சுடுகாட்டில் 40 ஆயிரம் ரூபாய் பணத்துடன் எரிந்த நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
#maduai உசிலம்பட்டி அருகே சுடுகாட்டில் 40 ஆயிரம் ரூபாய் பணத்துடன் எரிந்த நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது - கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் போலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.@mducollector | @MaduraiEmerging |@Ajithbala1222 @mrdheepan pic.twitter.com/hFTXu5Jtgw
— Arunchinna (@iamarunchinna) July 24, 2022
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த எழுமலை நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த எழுமலை காவல் நிலைய காவலர்கள் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த உடலின் அருகே மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டி மற்றும் ரூ.40 ஆயிரம் மதிக்கத்தக்க 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் காணப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில் இந்த பெண் யார்? கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை - காசி ‘உலா ரயில்’ - மத்திய ரயில்வே அமைச்சர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
சுடுகாட்டில் அடையாளம் தெரியாத பெண் கையில் 40 ஆயிரம் ரூபாய் பணத்துடன் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை எரிந்து கொலை செய்தது போல் தெரிகிறது. எனவே குற்றவாளிகளை கண்டரிய மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உசிலம்பட்டி எழுமலை பகுதியில் நடைபெற்ற சம்பவத்தைப் போல் கடந்த சில வாரங்களுக்கு முன் கொட்டாம்பட்டி பகுதியில் நடைபெற்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
க்ரைம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion