மேலும் அறிய
Advertisement
வரதட்சணை கொடுமை; துபாய் போன விடுவோமா..! திரும்பியவுடன் காத்திருந்த அதிர்ச்சி..!
வரதட்சணை கொடுமை வழக்கில் ஓராண்டாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி, துபாயில் இருந்து சென்னை திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
வரதட்சனை கொடுமை
கேரளா மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித் ஜோசப் (28). இவர் மீது இவருடைய மனைவி கடந்த ஆண்டு மானந்தவாடி போலீஸ் நிலையத்தில் வரதட்சனை கொடுமை புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வரதட்சனை கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அஜித் ஜோசப்பை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால், அஜித் ஜோசப் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார். இந்த தகவல் கேரள போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து வயநாடு போலீஸ் சூப்பிரண்டு, அஜித் ஜோசப்பை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி. போட்டு வைக்கப்பட்டிருந்தது.
ஒரு அறையில் அடைத்து
இந்த நிலையில் நேற்று இரவு துபாயிலிருந்து, ஃப்ளை துபாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அதே விமானத்தில் கேரள போலீசாரால் தேடப்படும், தலைமறை குற்றவாளியான அஜித் ஜோசப்பும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடி உரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் ஆய்வு செய்தபோது, இவர் வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது.
இதையடுத்து அவரை வெளியிடாமல், ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு கேரள போலீசுக்கும் ஓராண்டு தலைமறைவாக இருந்த, தேடப்படும் குற்றவாளி அஜித் ஜோசப், சென்னை விமான நிலையத்தில் சிக்கி இருக்கிறார் என்ற தகவலை அனுப்பினர். இதையடுத்து கேரளாவில் இருந்து தனிப்படை போலீசார் சென்னை வந்து கொண்டு இருக்கின்றனர். இதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள், கேரள மாநில தனிப்படை போலீசார் வரும் வரையில், அஜித் ஜோசப்பை பாதுகாப்பாக வைப்பதற்காக, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion