உடலுறவை தவிர்த்து வந்த எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கணவன் - காவல்நிலையத்தில் புகாரளித்த மனைவி...
25 வயதான அந்தப் பெண், வரதட்சணைக்காக தன்னை துன்புறுத்தியதாகவும் அவருடன் தொடர்பு கொண்ட பிறகு தனக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
எச்ஐவி பாசிட்டிவ் இருப்பதை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கணவன் மீது மனைவி புகார் அளித்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. பெங்களூருவின் பசவனகுடியில் 35 வயதுடைய பொறியாளர் மீது அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
25 வயதான அந்தப் பெண், வரதட்சணைக்காக தன்னை துன்புறுத்தியதாகவும் அவருடன் தொடர்பு கொண்ட பிறகு தனக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை வீட்டை விட்டு துரத்தி நகைகளைப் பறித்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் படிக்க: Manchester: பெண்ணின் உள்ளாடைக்குள் ரூபாய் நோட்டு.! கடைக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் சீண்டல்!
பாதிக்கப்பட்ட பெண் தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்கு சென்றபோது, உடல்நலக் குறைவை காரணம் காட்டி உடல் உறவை தவிர்த்து வந்துள்ளார். இதனால், கணவர் மீது ஆரம்பத்தில் இருந்தே சந்தேகிக்கத் தொடங்கினார். தேனிலவு முடிந்து திரும்பிய நிலையில் கணவர், மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார். கம்ப்யூட்டர் வகுப்பு எடுப்பதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் பணமும் வாங்கியுள்ளார். மேலும் படிக்க: Crime: 80 வயதில் தந்தைக்கு ஏற்பட்ட ஆசை...கோபத்தால் மகன் செய்த கொடூரச் செயல்...!
ஒருநாள் கணவர் வெளியூருக்கு சென்றிருந்தார். அப்போது, மனைவி கணவரின் அறையை ஆராய்ந்தபோது, அவருக்கு எச்.ஐ.வி இருப்பதாகக் கூறிய மெடிக்கல் ரிப்போர்டை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, திருமணத்திற்கு முன்பு எச்.ஐ.வி நிலை குறித்து தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், தனது கணவர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது குறித்து தனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் அந்தப் பெண் போலீசாரிடம் கூறினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செய்தி அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் படிக்க: Gujarat: பஸ் டிப்போவில் வைத்து 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவன் கைது !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்