Manchester: பெண்ணின் உள்ளாடைக்குள் ரூபாய் நோட்டு.! கடைக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் சீண்டல்!
பெண்ணின் உள்ளாடைக்குள் ரூபாய் நோட்டை திணித்த இளைஞரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடையில் தனியாக பெண் ஒருவர் வேலை பார்த்தப் போது கடைக்கு வந்த ஆண் வாடிக்கையாளர் ஒருவர் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் உரிய ஆதாரங்கள் இருந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகப்பெரிய சோகமாக அமைந்துள்ளது.
பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஷூ கடையில் நியாம் கல்லாகர் (21) என்ற இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர் அந்த கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த கடைக்கு ஒரு இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவர் கடைக்குள் வந்தவுடன் நியாமை ஒரு மாதிரி பார்த்துள்ளதால் அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இருப்பினும் அந்த நபர் ஷூ மாடல்கள் சிலவற்றை எடுக்குமாறு கூறியதை கேட்டவுடன் வாடிக்கையாளருக்கு நியாம் உதவியுள்ளார்.
அதன்பின்னர் அந்த நபர் ஒரு ஷூவை எடுத்து இதை போட்டு பார்க்கவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு நியாம் சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போது அந்த நபர் பாதி கால்களுடன் ஷூ நின்றுவிட்டது அதை போட எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த நபருக்கு நியாம் உதவி செய்துள்ளார். அவர் ஷூவை சரியாக மாட்டி விடும் போது கை அந்த நபரின் கால்களின் மீது பட்டுள்ளது. அதற்கு அந்த நபர், உங்களுடைய கைகள் என்னுடைய கால்களுக்கு நன்றாக மசாஜ் செய்கிறது என்று கூறியதாக தெரிகிறது. அதை நியாம் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.
அதற்கு பின்பு நியாம் பின்னால் திரும்பி மற்றோரு ஷூவை எடுக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த நபர் தன் கையில் இருந்து 5 யுரோ நோட்டை நியாமின் சட்டையை விலக்கி அவருடைய உள்ளாடைக்குள் திணித்துவிட்டு கடையில் இருந்து ஓடி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் நியாம் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின்னர் தன் கடையில் வேலை பார்க்கும் மற்றொரு ஊழியர் வந்தவுடன் அவரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். எனினும் காவல்துறையினர் இதுவரை அந்த புகாரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நியாம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த நபர் கடைக்கு வந்த சிசிடிவி ஆதாரங்களை கொடுத்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறார். பட்டப்பகலில் கடைக்கு உள்ளே வந்து பெண்ணிடம் ஒரு நபர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: தொழிலதிபர் கணவர்.. கூலிப்படை.. நீச்சல் குளத்தில் மிதந்த உடல்.. கைதான மனைவி..!