சந்தேகத்தால் மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற நபர்.. கள்ளக்குறிச்சியில் ஒரு கொடூர கதை
குழந்தைகளின் கூச்சலை கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர் தற்கொலைக்கு முயன்ற லோகநாதனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் திருக்கோவிலூர் அருகில் இருக்கிறது முதலூர் கிராமம். அந்த கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசிக்கிறார். திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன இவருக்கும் இவரது மனைவிக்கும் இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருக்கின்றனர்.
மூன்று பிள்ளைகளும் பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் படித்துவருகின்றனர். லோகநாதனும் அவரது மனைவியும் சென்னை அருகே செங்கல் சேம்பரில் தங்கி பணி செய்தனர்.
பொங்கல் பண்டிகைக்காக ஒரு வாரத்திற்கு மும்பு சொந்த ஊரான முதலூருக்கு இரண்டு பேரும் சென்றிருந்தனர், அப்போது மதுவில் பால்டாயிலை கலந்து குடித்த லோகநாதன் தற்கொலைக்கு முயன்றார். அந்த சமயத்தில் லோகநாதனின் குழந்தைகள் தங்களது அப்பாவின் தற்கொலை முயற்சியை கண்டு கூச்சலிட்டனர்.
குழந்தைகளின் கூச்சலை கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர் தற்கொலைக்கு முயன்ற லோகநாதனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்தத் தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லோகநாதன் தனது மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டிருந்தார் என்பது தெரியவந்தது. மேலும், அந்த சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதற்கிடையே, லோகநாதன் தனது மனைவியை மற்ற ஆண்களுடன் தொடர்புபடுத்தி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால், மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் பெயரை குறிப்பிட்டு கடிதம் எழுதிவைத்து கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
இந்த சமயத்தில் மனைவியை மாடிக்கு அழைத்து சென்ற லோகநாதன் அங்கு வைத்து அவரை கொலை செய்துவிட்டார். கொலை செய்து சடலத்தை மாடியில் மனைவியின் உடலை விட்டுவிட்டு கீழே வந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். கடிதத்தில் எழுதப்பட்டிருந்த நபரை காவல் துறையினர் விசாரித்தபோது தனக்கும் லோகநாதனின் மனைவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கூறியதாக தெரிகிறது. சந்தேக பார்வையால் ஒரு உயிரை எடுத்துவிட்டு தன்னை நம்பி வந்த உயிர்களை அனாதையாக விட்டிருக்கிறார் லோகநாதன்.
மன அழுத்தம் ஏற்பட்டாலே தற்கொலை எண்ணம் உண்டானாலோ அதனை மாற்ற கீழ்காணும் எண்களை அழைக்கவும். மாநில உதவி மையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: கடைசி வாரத்துல சூர மொக்கை.. பாஸு.. என்ன பிக்பாஸ் இது? கலாய்த்து தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்