காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு சாராயம் கடத்திய 3 பேர் கைது - 5,100 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்
வாகன தணிக்கையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளையும் வாகனங்களையும் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காளஹஸ்திநாதபுரம் கிராமம் மாத்தூர் சாலையில் செம்பனார்கோவில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வி தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்குப்பின் முரனாக பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை பின்தொடர்ந்து வந்த காரையும், நிறுத்தி சோதனை செய்துள்ளனர், அப்போது அந்த காரில் இருவர் 5100 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 400 சாராய பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து உடனடியாக காரில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை தினத்தில் விற்பனைக்காக சாராயத்தை கடத்தி வந்ததும், காவல்துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக இருசக்கர வாகனத்தில் பைலட்டாக காருக்கு முன்னால் ஒருவர் வந்ததும் தெரிய வந்தது.
வைகுண்ட ஏகாதசி - தருமபுரி ஸ்ரீ பரவாசு தேவர் சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு
காணும் பொங்கலில் காண வேண்டியது உறவினர்கள்தானே தவிர கொரோனாவை அல்ல - ஆளுநர் தமிழிசை
உடனடியாக காவல்துறையினர் 6 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான சாராய பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகள் உட்பட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாட்டை சேர்ந்த கார் 26 வயதான டிரைவர் ராஜ், மன்னம்பந்தலை சேர்ந்த 36 வயதான குமார் மற்றும் காருக்கு முன்பு பைலட்டாக வந்த திருக்களாச்சேரியை சேர்ந்த 23 வயதான முருகேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர
ட்விட்டர் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர
யூடியூப் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர...