மேலும் அறிய

"டெம்போலாம் வெச்சி கடத்திருக்கோம்”...பிஸ்தா பாணியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு மிரட்டல்.. இரண்டு பேர் கைது

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆண்ட்ராய்டு செயலி மூலம் எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் அழைப்பு விடுத்துள்ளனர், இது சர்வதேச எண்ணில் இருந்து அழைப்பு வந்தது போல் தெரிகிறது.

குருகிராமின் பட்லியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்றதாக பிசிஏ இறுதியாண்டு மாணவர் மற்றும் எலக்ட்ரீஷியன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆண்ட்ராய்டு செயலி மூலம் எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் அழைப்பு விடுத்துள்ளனர், இது சர்வதேச எண்ணில் இருந்து அழைப்பு வந்தது போல் தெரிகிறது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குருகிராமின் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள நேரு கல்லூரியில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் இளங்கலை மாணவர் மன்ஜீத் என்றும் அவரது கூட்டாளியான விக்ரம் அதே பகுதியில் எலக்ட்ரீஷியன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஜஜ்ஜாரில் உள்ள சிலானா கிராமத்தில் வசிப்பவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதை அடுத்து பிரிவு 31 குற்றப் பிரிவின் கீழ் தலைமை ஆய்வாளர் ஆனந்த் யாதவ் அவர்களைக் கைது செய்தார்.

"குற்றம் சாட்டப்பட்ட மஞ்சீத் தனது தொலைபேசியில் ஒரு ஆண்ட்ராய்டு பயன்பாட்டைப் பயன்படுத்தியுள்ளார், இது அழைப்பின் போது அசல் எண் காட்டப்படாமல் இருப்பதை உறுதிசெய்தது, அதற்கு பதிலாக பெறுநரின் தொலைபேசி திரையில் சர்வதேச மொபைல் எண் காட்டப்பட்டுள்ளது.

இதை அடுத்து காவல்துறையால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது என்று அவர்கள் உறுதியாக நம்பினர் தங்கள் திட்டத்தின்படி மிரட்டி பணம் பறிப்பதற்காக எம்எல்ஏவை அழைக்கத் திட்டமிட்டனர்" என்று குற்றத்தின் பின்னணியை ஆய்வாளர் விளக்கினார். இதை அடுத்து 25 ஆகஸ்ட் அன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ குல்தீப் வத்ஸ் தனக்கு "சர்வதேச" எண்களில் இருந்து மூன்று அழைப்புகள் வந்ததாகவும் அழைப்பாளர்கள் தன்னிடம் ரூபாய் 1 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்கத் தவறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் புகார் அளித்தார்.தனக்கு வந்த மூன்று அழைப்புகளில் ஒன்றை மட்டுமே எம்.எல்.ஏ. அட்டெட்ண்ட் செய்துள்ளார். அவரது புகாரின் பேரில், டிஎல்எஃப் 2 ஆம் கட்ட காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கின் விசாரணை குற்றப்பிரிவு எண் 31க்கு ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையின் போது, ​​அந்த அழைப்புகள் ஆண்ட்ராய்டு செயலிகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட VOIP அழைப்புகள் என்று கண்டறியப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். காங்கிரஸ் எம்எல்ஏவின் எண்ணைப் பெற மஞ்சீத்துக்கு உதவியதற்காக விக்ரம் கைது செய்யப்பட்டார்."நாங்கள் அவர்களை விசாரித்து வருகிறோம், நாளை அவர்களை நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு காவலில் வைப்போம்" என்று சங்வான் மேலும் கூறினார்.

இனி மிரட்டல் விடுத்த மாணவரின் எதிர்காலம் என்ன? எதற்காக இருவரும் இப்படியான மிரட்டல் விடுத்தார்கள் என்பதும் அதன் பின்னணியும் மேலதிக விசாரணையில் இனி புலப்படும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற வெறும் ரூ.50 தான் டிக்கெட்.! சிறப்பம்சம் என்ன.?
கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற வெறும் ரூ.50 தான் டிக்கெட்.! சிறப்பம்சம் என்ன.?
Samsung Galaxy S26 Leaks: Samsung பிரியர்களே.! Galaxy S26 வரிசை போன்களின் ரிலீஸ் எப்போ தெரியுமா.? கசிந்த தகவல்கள பாருங்க
Samsung பிரியர்களே.! Galaxy S26 வரிசை போன்களின் ரிலீஸ் எப்போ தெரியுமா.? கசிந்த தகவல்கள பாருங்க
Iran Trump Russia Warning: ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
Embed widget