குருகிராம்: கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்
குருகிராம் அருகே கார் விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். வேகமாக வந்த கார் அடுக்கிவைக்கப்பட்டிருந்த செங்கற்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
குருகிராம் அருகே கார் விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். வேகமாக வந்த கார் அடுக்கிவைக்கப்பட்டிருந்த செங்கற்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் குருகிராம் செக்டார் 88 இல் உள்ள கர்ஹி ஹர்சருவின் பட்டோடி சாலை கிராசிங் அருகே செங்கற்கள் குவிக்கப்பட்டிருந்தன. அதில் வேகமாக வந்த கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் இருந்த 6 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில், காரில் வந்தவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் வேலைப்பார்த்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் உடன் வேலைப்பார்வரின் திருமணத்திற்கு சென்று வரும்போது விபத்து நேர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “யார் கார் ஓட்டி வந்தார்கள் என்பது இன்னும் தெரியவரவில்லை. 6 பேரும் தனியார் மருத்துவமனையில் வேலைப்பார்த்து வந்துள்ளனர். நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
எலெக்ட்ரீஷியன் ஜக்பீர் சிங்(38), ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாகர் குமார்(24), நர்சிங் உதவியாளர் ஜிவாத்(19), கடை பொறுப்பாளர் பிரின்ஸ் குமார்(22), மேற்பார்வையாளர் நியாஜ் கான்(45) ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையின் வரவேற்பாளர் ஹர்த்திக் திவாரி(21) படுகாயமைடந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர்கள் வந்த மாருதி டிசைர் கார் பல முறை புறண்டுள்ளது. போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்த போது அனைவரும் பலத்த காயத்துடன் சுயநினைவின்றி இருந்தனர். அனைவரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவனையில் சேர்த்த போது 5 பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளார்” எனத் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே காரை ஓட்டி வந்தவர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்