பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான போது தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்புகள் ஒரு ‛ரீவைண்ட்’
பேனர் வைக்க திமுக தலைமை தடை விதித்திருந்தும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இன்னும் கோலாகலமாக பேனர்கள் வைக்கப்படுகிறது.
கடந்த 2019ல் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்ல நிகழ்ச்சிக்கு வைத்திருந்த பேனர் விழுந்ததில், ஸ்கூட்டரில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் சுபஸ்ரீக்கு நியாயம் கேட்டு கேள்வி எழுப்பினர். அதனால் அன்றைய தினம் முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் கைது செய்யப்பட்டார். சட்டரீதியான நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பேனர்கள் வைக்க நீதிமன்ற உத்தரவும் கிடைத்தது. அதன் பின் தற்போது ஆட்சி மாறிய பின் திமுக சார்பில் பேனர்கள் வைக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அதை மீறி பல இடங்களில் அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில் பேனர்கள் வைக்கப்படுகிறது. அவ்வாறு விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்ற விழா ஒன்றுக்கு கொடிகம்பம் வைத்த போது மின்கம்பி உரசி 13 வயதான தினேஷ் என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுபஸ்ரீ மறைவின் போது துவக்கத்தில் எப்படி அந்த வழக்கை நீர்த்து போக போலீசார் முயற்சி செய்தார்களாே... அதே போல் தான் தற்போதும் தினேஷ் வழக்கில் நடக்கிறது. சுபஸ்ரீக்கு எழுப்பப்பட்ட நியாயம்... தினேஷிற்கு மறுக்கப்பட்டதா... மறைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில், சுபஸ்ரீ இறப்பின் போது தமிழ்நாட்டில் முக்கிய பிரபலங்களும், கட்சிகளும் எழுப்பிய கண்டன குரல்களை ரீவைண்ட் செய்கிறோம்...
ஆளுங்கட்சியின் விளம்பர மோகத்தால் உயிரிழந்த சகோதரி சுபஸ்ரீ-ன் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
— M.K.Stalin (@mkstalin) September 18, 2019
நம்முடைய ஆறுதல்கள் அவர்களை தேற்றாது என்றபோதிலும், உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் பேனர் வைக்கப்படாது என்று தாக்கல் செய்த பிரமாண பத்திர உறுதிமொழியையே என் ஆறுதலாக கூறினேன் pic.twitter.com/EiRrXNQdhb
’கழக தலைவர் @mkstalin அவர்கள், அதிமுக பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ-யின் படத்துக்கு அஞ்சலி செலுத்தி, அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்’ pic.twitter.com/neSdx82w1Y
— DMK (@arivalayam) September 18, 2019
”பேனர் கலாசாரமே இருக்கக்கூடாது - அதிமுக பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இறந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.5 இலட்சம் நிதியுதவி”
— DMK (@arivalayam) September 18, 2019
-கழக தலைவர் @mkstalin அவர்கள் பேட்டி.https://t.co/be6SuiYwOF
காற்று வீசியதாலேயே பேனர் விழுந்தது; காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும்!
— Aloor Sha Navas (@aloor_ShaNavas) October 5, 2019
- சுபஸ்ரீ மரணம் குறித்து அதிமுக பொன்னையன் பேட்டி!
காற்றின் மீது வழக்குபோட சொன்னவர், காற்றை எப்படி கைது செய்வது என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம். இன்னும் பெருசா எதிர்பார்க்கிறோம்.
கொடுமை!#Subashree
சுபஸ்ரீ யின் மரணம் அதிமுகவால் ஏற்பட்டது
— Tamil Nadu Youth Congress (@TN_PYC) September 13, 2019
அப்பாவி இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை நாளை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் அதிமுகவின் அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் #WhoKilledShubashree pic.twitter.com/IOr36HEFIQ
சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்!
— M.K.Stalin (@mkstalin) September 21, 2019
காவல் நிலைய பாத்ரூமில் பலரும் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் @chennaipolice_ காப்பாற்றுவது யாருக்காக? pic.twitter.com/PjDWPl1Xf0
காற்று வீசியதாலேயே பேனர் விழுந்தது; காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும்: சுபஸ்ரீ மரணம் குறித்து பொன்னையன் பேட்டி
— shyam tharasu (@TharasuShyam) October 5, 2019
கோட்டிக்கார மனுஷன் முருகேசா..
சுபஸ்ரீ மரணம் குறித்த நடிகர் விஜய் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு
— Jahir Hussain 𝓣𝓱𝓪𝓵𝓪𝓹𝓪𝓽𝓱𝔂𝓥𝓲𝓳𝓪𝔂47👑 (@Jahir2441) September 19, 2019
* இசை வெளியீட்டு விழாவை விஜய் மிக சரியாக பயன்படுத்தியுள்ளார் - கமல்ஹாசன்#Bigil #BigilAudioLaunch #Vijay #KamalHaasan pic.twitter.com/nEU27hpegw