மேலும் அறிய
Advertisement
மதுரை : ”பணம் இல்ல, பள்ளிக்கூட புத்தகம்தான் இருந்துச்சு” : 10 லட்சம் அபேஸ் செய்த பெண் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி ?
’நீ கொடுத்த பையில் பணம் இல்லை, பள்ளிக்கூட புத்தகம்தான் இருந்துச்சு” என வசந்தி பொய்களை அடுக்கியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் பேக் தயாரிக்கும் தொழில் அதிகளவு நடைபெற்று வருகிறது. இளையான்குடியில் பேக் தைக்கும் தொழில் செய்துவரும் டெய்லர் அர்ஷத் தனது தொழிலை மேம்படுத்த 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பாண்டி, கார்த்தி உள்ளிட்ட நபர்கள் பணத்தை இரட்டிப்பாக மாற்றித் தருகிறோம் என கூறியுள்ளனர். இதனால் இளையான்குடியில் இருந்து பணத்துடன் அர்ஷத் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதிக்கு வந்துள்ளார். அர்ஷத் 10 லட்சம் பணத்துடன் வரும் தகவல் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்திக்கு தெரிந்துள்ளது.
அர்ஷத் வந்த பின் பணத்தை பறித்துக்கொண்டு விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அர்ஷத்தை மனம் நோகச் செய்துள்ளார். வசந்தியிடம் அர்ஷத் பணத்தை கேட்டதற்கு வசந்தி தரவில்லை. ’நீ கொடுத்த பையில் பணம் இல்லை பள்ளிக்கூட புத்தகம் தான் இருந்துச்சு” என வசந்தி பொய்களை அடுக்கியுள்ளார். மேலும் என்னிடம் பணம், பணம் என்று தொல்லை செய்தால் கஞ்சா கேசில் உள்ள வச்சுடுவேன் என மிரட்டியுள்ளார். பணத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் அர்ஷத் வந்ததால் மேலிட புகாருக்கு செல்லமாட்டார் என இன்ஸ்பெக்டர் வசந்தி நினைத்துள்ளார்.
ஆனால் அர்ஷத், மதுரை காவல்துறை எஸ்.பியிடம் புகாரை அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஏ.டி.எஸ்.பி சந்திரமவுலி விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணையில் இன்ஸ்பெக்டர் வசந்தி அர்ஷத்திடம் பணத்தை பறித்தது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வசந்தி நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.
மேலும் இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”மதுரையில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறேன் என பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது. சட்ட விரோத செயல் என்பதால் பாதிக்கப்படும் நபர்கள் கூட புகார் அளிப்பதில்லை அதனால் குற்றவாளிகள் தப்பிக்கின்றனர். இன்ஸ்பெக்டர் வசந்தி தொடர்ந்து பல்வே குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அவரை தொடர்ந்து விசாரணை நடத்தும்போது பல்வேறு குற்றச் சம்பவம் வெளிவரும். வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவல்துறையினர் நடந்துகொள்வது. ஒட்டுமொத்த காவல்துறையினருக்கு கெட்ட பெயரை உருவாக்குகிறது. குற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறையிருக்கு கடுமையான தண்டனை வழங்கும்போதுதான் குற்றங்கள் குறையும் என தெரிவித்தார்.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அனிதா எந்தவொரு புகார் வந்தாலும் புகார்தாரரிடம் பணம் பெற்றுக்கொண்டு, அதில் சம்பந்தமில்லாதவர்களை வழக்கில் சேர்ப்பது, பின்பு அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பது, கொலை வழக்குகளில் முக்கியக் குற்றவாளிகளிடம் பெரும் தொகை பெற்றுக்கொண்டு தலைமறைவு என்று சொல்லி அவர்களைச் சுதந்திரமாக நடமாடவிடுவது என பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நிலையில், கடந்த நவம்பர் மாதம் லஞ்சம் பெற்ற வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரைக் கைதுசெய்திருக்கிறார்கள். இந்நிலையில் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - காரைக்குடியில் திருடிய நகை... திருவண்ணாமலை சம்பவத்தால் கிடைத்தது!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion