மேலும் அறிய
காரைக்குடியில் திருடிய நகை... திருவண்ணாமலை சம்பவத்தால் கிடைத்தது!
திருச்சியில் விற்பனை செய்யப்பட்ட 27 சவரன் தங்க நகைகளை கைப்பற்றி, சுப்பிரமணியனை சிறையில் அடைத்தனர்.

போலீஸ்_விசாரணை
காரைக்குடியில் அரசுப் பள்ளி ஆசிரியையின் வீட்டுக்குள் புகுந்து 30 சவரன் நகை கொள்ளை போன சம்பவத்தில், திருவண்ணாமலையில் பிடிபட்ட கொள்ளையர்கள் மூலம் 27 சவரன் நகை போலீசார் மீட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருவேலங்குடி ஊராட்சி அரசுப் பள்ளியில் ரேணுகாதேவி ஆசிரியராக உள்ளார். காரைக்குடி ஓ.என்.ஜி காலணி கம்பன் தெருவில் வசித்துவரும் நிலையில், இவரது கணவர் பாண்டியராஜன் டெல்லியில் வாகன ஓட்டுனராக பணி செய்கிறார். இதனால் ரேணுகா தேவி அவ்வப்போது அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவருவார். இந்நிலையில், கடந்த 11- ஆம் தேதி இரவு ரேணுகாதேவி ஓ.சிறுவயல் கிராமத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில், இருந்த 30 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. இதனால் பதட்டமடைந்த ரேணுகாதேவி குன்றக்குடி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

மேலும் சுற்றுலா தொடர்பான கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
புகாரை பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், திருவண்ணாமலையில் ஒரு வீட்டில் திருட முயற்சித்த போது, தூத்துக்குடியைச் சேர்ந்த, ரமேஷ், இந்திரா கார்த்திக், ஏகலைவன், முத்துக்குமார் உள்ளிட்ட 6 நபர்கள் கொண்ட கும்பல் போலீசில் சிக்கியது. அவர்களை விசாரணை செய்ததில் காரைக்குடி ஆசிரியர் ரேணுகா வீட்டில் திருடியதை ஒத்துக்கொண்டதையடுத்து, காரைக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனடிப்படையில், திருவண்ணாமலை சென்ற காரைக்குடி போலீசார் அவர்களிடத்தில் மேற்கொண்ட விசாரணையில், வீடுகளை நோட்டமிட்டு அடையாளம் காட்டிய முக்கிய நபர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என தெரியவந்தது. தகவலை அடுத்து திருமயத்தில் பதுங்கியிருந்த சண்முக சுந்தரத்தை கைது செய்து, அவர் கொடுத்த தகவலின் பேரில் திருச்சியில் விற்பனை செய்த 27 சவரன் நகைகளை கைப்பற்றி, சுப்பிரமணியனை சிறையில் அடைத்தனர்.

மேலும் இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்..,” தற்போது சிக்கியுள்ள நகை கொள்ளையர்கள் பல்வேறு இடத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மற்ற இடங்களில் நகை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவரும்” என்றனர்.
சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement