மேலும் அறிய

Kanchipuram Attack : “ஓட, ஓட பெண் காவலரை துரத்தி சென்று வெட்டிய கொடூரம்” காஞ்சியில் அதிர்ச்சி சம்பவம்..!

Kanchipuram Crime : ஏகாம்பரநாதர் கோயில் அருகே பெண் தலைமை காவலர் ஓட விரட்டி வெட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் அருகே பெண் தலைமை காவலர் ஓட விரட்டி வெட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

கணவன் மனைவிக்கு இடையே தகராறு 

காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி .‌ டில்லி ராணியின் கணவர் மேகநாதன். மேகநாதன் டில்லி ராணி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்பொழுது பிரிந்து வாழ்வதும் சில மாதங்கள் கழித்து சேர்ந்து வாழ்வதும் , என அவர்களுடைய வாழ்க்கை சண்டை சச்சரவுடன் இருந்து வந்துள்ளது.

ஸ்கெட்ச் போட்டு வந்த கணவர் 

இன்று டில்லி ராணி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள சாலை தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில்  பணி நிமிர்த்தமாக , சாலை தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தபொழுது இந்தியன் வங்கி அருகே அவரது கணவர் மேகநாதன் இடைமறித்து, வாகனத்தை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் பெண் காவலரான டில்லி ராணிநிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

பகலில் நடந்த ஏறிய கொடூரம் 

தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண் காவலரை வெட்ட மேகநாதனை வருவதை பார்த்த டில்லி ராணி, தப்பிக்க ஓடியுள்ளார். ஆனால், அவரை மேகநாதன் அவரை விடாமல் கொலை வெறியுடன் துரத்திக்கொண்டு ஓடியுள்ளார். உயிருக்கு பயந்த டில்லி ராணி அங்கிருந்த வங்கி ஏடிஎம்மில், தஞ்சமடைய முயற்சி செய்த பொழுது, இடது கையில் சரமாரியாக டில்லி ராணியை மேகநாதன் தாக்கியுள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டத்தை பார்த்த மேகநாதன் அங்கு இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். 

உயிருக்கு போராடிய காவலர் - காப்பாற்றிய போலீஸ்

சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டில்லி ராணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் காவலர் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து தப்பி ஓடிய கணவரை தேடி வருகின்றனர். மேலும் ஏடிஎம் தற்காலிகமாக பூட்டப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டம் பகலில் பொதுமக்கள் கூடி இருந்த இடத்தில் பெண் காவலர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்டுள்ள  சம்பவம் காஞ்சிபுரம் நகர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
Thaipusam 2025 Wishes: முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP executive cheating: இளம்பெண்களுக்கு மிரட்டல்! சிக்கிய ஆபாச வீடியோக்கள்! பாஜக நிர்வாகி கைதுTirupattur: நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ! கள்ளக்காதலன் பகீர்!VJ Siddhu Vlogs: ”அடி.. உதை.. ஆவேசம்” சர்ச்சையில் சிக்கிய VJ சித்து! வெளியான அதிர்ச்சி வீடியோ!செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
Thaipusam 2025 Wishes: முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
விஜய் அதிமுக கூட்டணிக்கு சென்றால் அதுதான் அவரது அரசியலுக்கு தற்கொலை பாதையாக அமையும் - தமிமுன் அன்சாரி
விஜய் அதிமுக கூட்டணிக்கு சென்றால் அதுதான் அவரது அரசியலுக்கு தற்கொலை பாதையாக அமையும் - தமிமுன் அன்சாரி
Modi in France: பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்.. மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்.. மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
Ranveer Allahbadia Controversy:  யார் இந்த ரன்வீர் அல்லாபடியா..! ஒரே கேள்வியால் கொந்தளிக்கும் இந்தியா, குவியும் வழக்குகள்
Ranveer Allahbadia Controversy: யார் இந்த ரன்வீர் அல்லாபடியா..! ஒரே கேள்வியால் கொந்தளிக்கும் இந்தியா, குவியும் வழக்குகள்
Thaipusam 2025 : “கைகளில் கற்பூரம் ஏந்தி அரோகரா முழக்கம்” பழனியில் களைக்கட்டிய தைப்பூச பெருவிழா..!
Thaipusam 2025 : “கைகளில் கற்பூரம் ஏந்தி அரோகரா முழக்கம்” பழனியில் களைக்கட்டிய தைப்பூச பெருவிழா..!
Embed widget