மேலும் அறிய
Advertisement
crime: வேறு ஒருவருடன் தொடர்பு..கண்டித்த நாத்தனார்..மிரட்ட போய் கொலையில் முடிந்த கொடூரம்
தன்னை கண்டித்த நாத்தனார் சுமதியை மிரட்ட சொன்னதால், கத்தியை காட்டி மிரட்ட சென்றவர்கள், கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கைகள் கட்டப்பட்டு, சடலமாக கிடந்த சம்பவத்தில், கொலை செய்ததாக, ஹோமியோபதி மருத்துவர் உள்ளிட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மனைவி சுமதி(45), கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடமாக கணவனைப் பிரிந்து, தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் தற்காலிக கிராமப்புற உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். சுமதியின் இரண்டு மகன்கள் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
இதனால் சுமதி மட்டும் வீட்டில் தனியாக வசித்துள்ளார். தினமும் 6 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை செய்யும் சுமதி, கடந்த வாரம் காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து திறந்து பார்த்துள்ளனர். அப்பொழுது சுமதி வீட்டில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதனை அடுத்து பென்னாரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் காவல் துறையினர் சுமதி வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது, கைகள் கட்டப்பட்டு, தலையின் பின்பக்கத்தில் படுகாயத்துடனும், உடலில் ஆங்காங்கே வெட்டு காயங்கள் ஏற்பட்டு மர்ரமான முறையில் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார். இதனையடுந்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து தடவியல் துறை மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, காவல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து சுமதி வீட்டுக்கு யாரேனும் வந்து சென்றார்களா என அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரனை நடத்தினர். அப்பொழுது சுமதியின் உறவினர் ஒருவரும், அவருடன் ஒரு இளைஞர் வந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்பொழுது சுமதியின் தம்பி மனைவி ஹோமியோபதி மருத்துவரான இந்திரகுமாரியின் தம்பி அரவிந்த் மற்றும் அவரது நண்பர் சக்தி என்பது தெரியவந்தது. மேலும் காவல் துறையினர் விசாரணையில், ஹோமியோபதி மருத்துவரான இந்திரகுமாரி, சென்னையில் பயிற்சி எடுத்து வருவதாகவும், அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுமதி, இந்திரகுமாரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்னை திட்டுவதாக, தம்பி அரவிந்த்-யிடம், இந்திகுமாரி தெரிவித்துள்ளார். இதனால், ஓசூரில் இருந்து அரவிந்த் தனது நண்பர் சக்தியை அழைத்துக் கொண்டு பென்னாகரம் வந்துள்ளார். தொடர்ந்து சுமதியை மிரட்டி விட்டு வருவதற்காக, கத்தி வாங்கி கொண்டு சுமதி வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு மிரட்டுவதற்கு கழுத்தில் கத்தி வைத்துள்ளனர். ஆனால் வாக்குவாதம் ஏற்பட்டு, கழுத்தை அறுத்து, கைகளை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக, அரவிந்த் காவல் நிலையத்தில் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சுமதியை கொலை செய்ததாக ஹோமியோபதி மருத்துவரான இந்திரகுமாரி, அவரது தம்பி அரவிந்த், சக்தி மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், தன்னை கண்டித்த நாத்தனார் சுமதியை மிரட்ட சொன்னதால், கத்தியை காட்டி மிரட்ட சென்றவர்கள், கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion