Crime: திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை! காதலிக்கு தெரியாமலே 2 லட்சத்துக்கு விற்ற காதலன்!
ஜோலார்பேட்டை அருகே கணவரை இழந்த இளம் பெண்ணுக்கு பிறந்த குழந்தையை .2 லட்சத்துக்கு காதலனே விற்பனைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு இளம் பெண்ணுக்குத் திருமணமாகி, இரண்டுப் பிள்ளைகள் உள்ளனர். இதில் கடந்த 2019-ம் ஆண்டு இளம் பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ளார். இதனால் அந்த இளம் பெண் பிள்ளைகளின் செலவிற்கு ஜோலார்பேட்டையில் உள்ள ஷூ கம்பெனிக்கு வேலைக்குச் சேர்ந்து, வேலை செய்து கொண்டே பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார்.
அப்போது ஜோலார்பேட்டை அருகேயுள்ள சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா (23) வயது இவர் தனியார் பள்ளி ஒன்றில், வாகன ஓட்டுநராக வேலைச் செய்து வருக்கிறார். ஜீவாவுடன் இளம் பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் ஜீவா,மற்றும் இளம் பெண்ணிற்க்கிடையே நெருக்கம் அதிகமானதால், இருவரும் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த இளம் பெண் கர்ப்பமடைந்துள்ளார் . இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி, இளம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
கணவனை இழந்த இளம் பெண் மற்றும் வயதில் மூத்தவர் என்பதால் அந்த பெண்ணை ஜீவாவின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஜீவாவின் குடும்பத்தினர் ‘குழந்தையையும் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டனர். இதையடுத்து, ஜீவாவுக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. குழந்தையை யாருக்காவது தத்து கொடுத்துவிடலாம் என கூறியுள்ளார். பிறகு, நாம் ஊரறிய முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஜீவா தெரிவித்து உள்ளார். இதற்கு இளம் பெண் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கட்டாயப்படுத்தி குழந்தையை பறித்துசென்ற ஜீவா, கெஜல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 30 வயது பெண்ணான பப்பி மற்றும் இவரின் உறவினர் தோரணம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது (34) ஆகியோர் மூலமாக குழந்தையை விற்பனைச் செய்ய பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. பின்னர் குழந்தையை நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் வயது (47) என்பவரிடம் 2 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி முடித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, குழந்தையை விற்பனைச் செய்துவிட்டு, இளம் பெண்ணை சந்திக்கச் சென்ற ஜீவா இளம் பெண்ணிடம் இனி குழந்தையால் யாருக்கும் தொல்லை கிடையாது. நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே தொடர்ந்து உறவில் இருக்கலாம்’ என்று ஜீவா தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் தனது குழந்தையை திரும்பக் கொடு என வாக்குவாதத்தில் ஜீவாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு ஜீவா விற்பனைச் செய்துவிட்டதாக சொன்னதால், உடனடியாக இளம் பெண் ஜோலார்பேட்டை காவல் நிலையம் சென்று புகாரளித்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விற்பனைச் செய்யப்பட்ட குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து ஜீவா மற்றும் குழந்தையை விற்க உதவிய பப்பி, மணிகண்டன், குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய தமிழ்ச்செல்வன் ஆகிய 4 பேரையும் காவல்துஇறையினர் கைது செய்து, சிறையில் அடைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

