‛பார்ட் டைம் கஞ்சா சேல்’ சூர்யா-தமன்னா கைது!
இருவரும் ஜோடியாக சென்று கஞ்சா விற்பனை செய்தால் காவல் துறையினருக்கு சந்தேகம் வராது என்பதாலும், ஊரடங்கு காலம் என்பதால் செவிலியர் எனக்கூறி எங்கும் சென்று வரலாம் எனவும் திட்டமிட்டு இருந்துள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காதல் ஜோடியை கைது செய்த காவல் துறையினர், 2.25 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.
கோவை பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து அதிகளவில் கஞ்சா விற்பனை நடப்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பீளமேடு காவல் துறையினர் குற்றச் செயல்களை தடுப்பதற்கான நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது நேரு நகர் அருகேயுள்ள வீரியம்பாளையம் சாலையில் பீளமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்குமார் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அங்குள்ள மின்சார அலுவலகம் அருகே காலி இடத்தில் ஒரு இளம்பெண்ணுடன் ஒரு வாலிபர் நின்று பேசிக் கொண்டிருப்பதை பேசிக் கொண்டு இருந்துள்ளார். சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த ஜோடி பேசிக் கொண்டிருந்ததால், அவர்களிடம் உதவி ஆய்வாளர் விசாரித்துள்ளார். விசாரணையின் போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கையில் வைத்திருந்த பையினை வாங்கி சோதனை செய்துள்ளார். அதில் பொட்டலங்களாக 2 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்து இருப்பது தெரியவந்தது.
PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!
இதையடுத்து இருவரையும் பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமன்னா என்கிற விநோதினி (21) என்பதும், டிப்ளமோ நர்சிங் படிப்பு படித்திருப்பதும் தெரியவந்தது. மேலும் விநோதினி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும், அவருடன் இருந்த வாலிபர் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சூர்ய பிரசாத் (21) என்பதும் தெரியவந்தது. சூர்ய பிரசாத் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலர்கள் என்பதும், காதலுடன் கஞ்சா தொழிலையும் வளர்க்க திட்டமிட்டதும் தெரியவந்தது. காந்தி மாநகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த இருவரும் ஜோடியாக சென்று கஞ்சா விற்பனை செய்தால் காவல் துறையினருக்கு சந்தேகம் வராது என்பதாலும், ஊரடங்கு காலம் என்பதால் செவிலியர் எனக்கூறி எங்கும் சென்று வரலாம் எனவும் திட்டமிட்டு இருந்துள்ளனர். இதனிடையே காதல் ஜோடி கையும், களவுமாக காவல் துறையினரிடம் பிடிபட்டுள்ளனர்.
இதையடுத்து விநோதினி மற்றும் சூரிய பிரசாத்தினை கைது செய்த காவல் துறையினர், 2 கிலோ 250 கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வேறு எதேனும் கஞ்சா வழக்கில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், கஞ்சா எங்கியிருந்து வாங்கினர் என்பது குறித்தும் பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கில் வருவாய்க்காக இது போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!