முழு அலர்ட்டில் காஞ்சிபுரம்..! ஏடிஎம் கொள்ளை எதிரொலி..! குற்றவாளியை சுத்து போடும் போலீஸ்..!
தொடர் ஏடிஎம் கொள்ளை எதிரொலி காஞ்சியில் உள்ள லாட்ஜ்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
![முழு அலர்ட்டில் காஞ்சிபுரம்..! ஏடிஎம் கொள்ளை எதிரொலி..! குற்றவாளியை சுத்து போடும் போலீஸ்..! Cops raid lodges in Kanchi following serial ATM robbery முழு அலர்ட்டில் காஞ்சிபுரம்..! ஏடிஎம் கொள்ளை எதிரொலி..! குற்றவாளியை சுத்து போடும் போலீஸ்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/12/d073e0eceabec87dd5667e4179a0055a1676210344232109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆந்திரா மாநில கொள்ளையர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர்.நான்கு ஏடிஎம் இயந்திரத்திதை உடைப்பதற்கு கேஸ் வெல்டிங் மிஷினை பயண்படுத்தி 4 ஏடிஎம்மை உடைத்து அதில் இருந்த ரூ 56 லட்ச பணத்தை எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள் 4 ஏ டி எம் மையத்துடைய சிசிடிவி கேமராவையும் உடைத்துள்ளனர். மேலும் ஆதாரங்களை அழிக்கும் நோக்கோடு கேஸ் வெல்டிங் நெருப்பைக் பயண்படுத்தி தீயிட்டு கொளுத்தி உள்ளனர். குறிப்பாக சிசிடிவி காட்சிகள் பதிவாகவும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை தீயிட்டு கொளுத்தி அளித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாரியம்மன் கோவில் 10வது தெரு, தேனிமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூர் பேருந்து நிலையம் ஆகிய நான்கு ஏ.டி.எம் மையங்களில் தடய அறிவியல் துறையினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.நான்கு ஏ.டி.எம் மையங்களில் இருந்து தடய அறிவியல் துறையினர் மாதிரிகளை சேகரிக்கப்பட்டு சென்னை ஆய்யோகத்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து நகரில் பல்வேறு இடங்களில் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் யாரேனும் உள்ளார்களா எனவும், திருவண்ணாமலை நகருக்கு வரும் அனைத்து சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். மேலும் ஆந்திரா மாநிலத்திற்கு எஸ்பி தலைமையில் ஒரு தனிப்பட்டையும் , தெலுங்கனா மாநிலத்திற்கு ஒரு தனிப்பட்டையினர் , கர்நாடக மாநிலத்திற்கு ஒரு தனிப்பட்டை என 3 எஸ்பி தலைமையில் மூன்று மாநிலத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)