மேலும் அறிய
Advertisement
காவலர் முத்துசங்கு செல்போனில் சிக்கிய முக்கிய ஆதாரம் : விசாரணையை வேகப்படுத்தும் சைபர் கிரைம் !
காவலர் முத்துசங்குவின் செல்போனை அவரது மனைவி ஆய்வு செய்ய சொல்லிய நிலையில் சைபர் கிரைம் போலீஸ் முக்கிய ஆதரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்துவதாக தகவல் கசிந்துள்ளது.
ராஜமாணிக்கம் என்பவரின் மகன் முத்துசங்கு தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிய நிலையில் முன்னாள் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணனின் அரசு இல்லத்தில் பாதுகாவலராக பணிபுரிந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது மதுரை நகர் ஆயுதப்படை குடியிருப்பில் வசிக்கும் முத்து சங்கு அண்ணாநகர் காவலர் ரோந்து வாகனத்தில் பணி செய்துவருகிறார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவலர் முத்துசங்கு, சுபாஷினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமண நிச்சயத்தின் போது முத்து சங்கு ”உதவி ஆய்வாளராக பணி செய்வதாக” கூறியுள்ளார். ஆனால் அவர் கான்ஸ்டபிளாக பணிபுரிவது திருமணத்திற்கு பின் தெரியவந்துள்ளது. இதனால் மனைவி சுபாஷினி கணவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியுள்ளது. இதையடுத்து திருமணத்தின் போது போடப்பட்ட 25 சவரன் தங்க நகையை மனைவியிடம் பெற்ற முத்துசங்கு அடகு வைத்துள்ளார். கணவர் முத்துசங்கு தினசரி செல்போனை பயன்படுத்திக்கொண்டே இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மனைவி சுபாஷினி அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது பேஸ்புக் மெசஞ்சரில் 15 க்கும் மேற்பட்ட பெண்களிடம் போலியான அக்கவுண்ட் மூலம் ஆபாசமாக பேசியுள்ளதையும், ஆபாசமான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளதையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து கணவரிடம் கேட்டபோது சுபாஷினியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் முத்துசங்கு மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். சமரச பேச்சுக்கு பின் சுபாஷினி கணவருடன் சென்று வாழ்ந்துவந்த நிலையில் வரதட்சனை கொடுமை செய்து, கட்டாய பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் முத்துசங்கு தொடர்ச்சியாக செல்போனில், சமூகவலைதளங்களில் ஆபாசமாக பேசிவந்ததை ஆதாரமாக எடுத்துள்ளார். இந்நிலையில் கணவரின் ஆபாச செயல் குறித்து கண்டுபிடித்த மனைவி சுபாஷினி கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் தனது பெற்றோருடன் வந்து புகார் மனு அளித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் சுபாஷிணி, " என்னுடைய கணவர் போலீஸ் என்ற பதவியை தவறாக பயன்படுத்தி பெண்களை சமுகவலைதளங்கள் மூலமாக ஏமாற்றி பாலியல் தொந்தரவு செய்கிறார். அவர் மீது புகார் அளித்தபோது முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு தெரிந்தவர் என நடவடிக்கை எடுக்கவில்லை. எனது கணவரை கைது செய்து அவரது செல்போனை பறிமுதல் செய்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினால் பல்வேறு பெண்களின் வாழ்க்கை காப்பற்றப்படும்" என தெரிவித்தார். இந்நிலையில் முத்துசங்குவிடம் ஆயுதப்படை உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்திவருகிறார். முத்துசங்குவின் செல்போனை சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். இதனால் முத்துசங்குமீது விரைவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறையின் சிலர், " முத்துசங்கு முன்னாள் அமைச்சரின் பெயரை பல்வேறு இடங்களில் தவறாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அவரின் செல்போனை ஆய்வு செய்ததில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை செய்துவருகிறோம். முத்துசங்கு மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட உள்ளது" எனவும் தெரிவித்தனர்.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் -தெப்பத்தில் சென்று நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
க்ரைம்
க்ரைம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion