மேலும் அறிய

தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களிடையே மோதல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் இடையே தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவது தொடர்பாக மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், சந்திரபாடி, திருமுல்லைவாசல், மடவாய்மேடு உள்ளிட்ட கிராமங்களில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை கொண்டு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவ கிராமங்கள் மீது மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 


தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களிடையே மோதல்!

இந்த சூழலில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கோரி சுருக்கு மடி வலையை பயன்படுத்தும் பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி, மடவமேடு உள்ளிட்ட மீனவர்கள் கடந்த மாதம் ரேஷன் கார்டு ஒப்படைக்கும் போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டனர். இரண்டு தரப்பும் மீனவர்களும் மாறி மாறி போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தடையை மீறி தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தது அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடித்த மீன்கள், மீன்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், மீன்பிடி படகுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அதனையடுத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தாமல் இருந்தனர்.


தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களிடையே மோதல்!

இந்நிலையில் தடையை மீறி தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்காக பூம்புகார், சந்திரபாடி ஆகிய கிராம மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இதனை அறிந்த தரங்கம்பாடி, சின்னங்குடி, புதுப்பேட்டை, மாணிக்கபங்கு, சின்னமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள் தடுத்து நிறுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்குள் சென்றனர். இதனால் நடுக்கடலில் 2 மீனவர் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

சுருக்கு மடி வலை அனுமதி: 21 மீனவ கிராம மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

இதனையடுத்து தரங்கம்பாடி விரைந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு மீனவ பஞ்சாயத்து தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மோதலைத் தவிர்க்க தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட சுறுக்கு வழியை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு விசைப்பலகை நடுக்கடலில்  தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் மாவட்ட மீனவ கிராமங்கள் இடையே பெரும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட மீனவர்கள் மூன்று மாவட்ட தலைமை மீனவ கிராமமான நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையில் அவசர ஆலோசனை கூட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது
தஞ்சை அருகே பட்டப்பகலில் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... நகைகளை திருடிய 2 பேர் கைது
புதுச்சேரியில் அதிர்ச்சி! காயப்போட்ட பெண்களின் உள்ளாடைகள் மாயம்... பாழடைந்த வீட்டில் கண்டெடுப்பு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! காயப்போட்ட பெண்களின் உள்ளாடைகள் மாயம்... பாழடைந்த வீட்டில் கண்டெடுப்பு!
பைக் ஓட்டிய 17 வயது சிறுவன்... பறிபோன முதியவரின் உயிர்! தந்தையைச் சிறையில் தள்ளிய காவல்துறை!
பைக் ஓட்டிய 17 வயது சிறுவன்... பறிபோன முதியவரின் உயிர்! தந்தையைச் சிறையில் தள்ளிய காவல்துறை!
உடைந்த கண்ணாடி வளையல்... மாட்டிக் கொண்ட இட்லி கடை பெண் !! நகைக்காக அரங்கேறிய கொடூரம்
உடைந்த கண்ணாடி வளையல்... மாட்டிக் கொண்ட இட்லி கடை பெண் !! நகைக்காக அரங்கேறிய கொடூரம்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Gem Veeramani Case: ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
Mahindra Thar OG Variants: மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
Embed widget