Crime: 11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டாகிராம் நண்பர்..! பகீர் பின்னணி
தாய் அளித்த புகாரின்படி, 11 ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராஜ் திவேதி என்ற நபருடன் கடந்த ஆண்டு சமூக ஊடக தளத்தில் நட்பு கொண்டிருந்துள்ளார்.
![Crime: 11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டாகிராம் நண்பர்..! பகீர் பின்னணி Class 11 student physically abused by instagram friend threatened over sensitive photos in Gurugram Crime: 11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டாகிராம் நண்பர்..! பகீர் பின்னணி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/04/003ba6c03dac1934f23b55277df689071675489405298109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
16 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் நட்பாக பேசி பலமுறை ஹோட்டலுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
குருகிராமில் 16 வயது சிறுமி ஒருவர் சமூக ஊடக தளத்தில் சந்தித்த ஒருவரால் பலமுறை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சந்தேகத்திற்குரிய நபர் சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை சிறுமியின் தாய்க்கு அனுப்பிய பிறகு இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயின் புகாரின் பேரில், சந்தேகத்திற்குரிய நபர் மீது கடந்த செவ்வாய்க்கிழமை மகளிர் காவல் நிலையத்தில் (மேற்கு) எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
இன்ஸ்டாகிராம் நட்பு
தாய் அளித்த புகாரின்படி, 11 ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராஜ் திவேதி என்ற நபருடன் கடந்த ஆண்டு சமூக ஊடக தளத்தில் நட்பு கொண்டதாக தெரிகிறது. இருவருக்கும் இடையேயான உரையாடல் பல நாட்கள் தொடர்ந்துள்ளது, மேலும் அவர்கள் இருவரும் பல வீடியோக்களையும், படங்களையும் பரிமாறிக்கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.
ஹோட்டலுக்கு மிரட்டி அழைப்பு
“சந்தேகத்திற்குரிய நபர் பின்னர் குருகிராமுக்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த வாரம் மீண்டும் இரண்டு முறை சிறுமியை ஹோட்டலுக்கு அழகுத்துள்ளார். சந்தேகத்திற்குரிய நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் சாட்களை வெளியிட்டு வைரலாக்குவேன் என்று மிரட்டி அவரை ஹோட்டலுக்கு வருமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். செவ்வாயன்று அவர் சிறுமியின் நிர்வாண படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, மேலும் அதை அவரது தாயாருக்கும் அனுப்பினார். தாய் சிறுமியிடம் கேட்டபோது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறியுள்ளார், பின்னர் அவர்கள் காவல்துறையை அணுகினர்," என்று காவல்துறை உதவி ஆணையர் (குற்றம்) ப்ரீத் பால் சங்வான் கூறினார்.
வழக்குப் பதிவு
தாயின் புகாரின் பேரில், செவ்வாய்க்கிழமை மாலை, மேற்கு மகளிர் காவல் நிலையத்தில், திவேதிக்கு எதிராக 8 (பாலியல் வன்கொடுமை), 12 (பாலியல் துன்புறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் ஐடியின் பிரிவு 67A ஆகியவற்றின் கீழும், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. "எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, சந்தேகத்திற்குரிய நபரைப் பிடிக்க நாங்கள் சோதனைகளை நடத்தி வருகிறோம்" என்று மேற்கு மகளிர் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி பூனம் சிங் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)