CT Mani Arrest: கைது செய்யச்சென்ற உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மீது ரவுடி சி.டி மணி துப்பாக்கி சூடு!
ரவுடி சி.டி மணியை பிடிக்க சென்ற உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்சென்னை பகுதியின் பிரபல ரவுடி சிடி மணி. இவர் மீது 8-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன, மேலும் பலமுறை சிறைசென்று வந்த குற்ற பின்னணியை கொண்டவர். கடந்த சில நாட்களாக இவர் தலைமறைவாக இருந்துவந்த நிலையில், தனிப்படை அமைத்து இவரை தேடும் பணி நடைபெற்று வந்தது, இந்நிலையில் நாவலூர் அருகே பதுங்கியிருந்த இவரை காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளார் சிடி மணி. இதில் தனிப்படை காவல்துறை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்ததாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்த உதவி ஆய்வாளருக்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடி சிடி மணியை காவல்துறையினர் கைது செய்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர்.
உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கை மற்றும் கால் ஆகியவை பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

