மேலும் அறிய
கொடுத்த பணத்துக்கு ஒருமுறைதான்! டேட்டிங் செயலியில் சேர்ந்த மாடல் அழகி! பிரச்னை செய்த பேராசிரியர்!
பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் இரண்டாம் முறை கேட்டதால் காவலன் செயலி மூலம் உதவி பேராசிரியரை ஆபத்தில் சிக்க வைத்துள்ளனர்
![கொடுத்த பணத்துக்கு ஒருமுறைதான்! டேட்டிங் செயலியில் சேர்ந்த மாடல் அழகி! பிரச்னை செய்த பேராசிரியர்! chennai avadi assistant professor asking sex workers for the second time TNN கொடுத்த பணத்துக்கு ஒருமுறைதான்! டேட்டிங் செயலியில் சேர்ந்த மாடல் அழகி! பிரச்னை செய்த பேராசிரியர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/06/d2968f8881425d111be9df33b64a8a0c1659774597_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாதிரிப்படம்
Source : Getty Images
மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய உதவி பேராசிரியர் தவறாக நடந்ததால் ஆபத்தில் சிக்கி உள்ளார். பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் சென்று சேஷ்டை செய்ததால் காவலன் செயலி மூலம் உதவி பேராசிரியர் மற்றும் அவரது நண்பரை கோர்த்துவிட்ட பெண்கள். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![கொடுத்த பணத்துக்கு ஒருமுறைதான்! டேட்டிங் செயலியில் சேர்ந்த மாடல் அழகி! பிரச்னை செய்த பேராசிரியர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/01/88c5f983931f7c6266a188f89a858d32_original.png)
சென்னை அடுத்த ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் கார்த்திகேயன் (41), தனது நண்பர் ஐயப்பன் என்பவரோடு சேர்ந்து டேட்டிங் ஆப் மூலம் பாலியல் தொழில் நடத்தும் புரோக்கர்களை தொடர்பு கொண்டு, 2 பெண்களை புக் செய்ததும், பின்னர், அவர்களை கோயம்பேட்டில் இருந்து காரில் அழைத்துக்கொண்டு வேளச்சேரியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸிற்கு வந்ததும், பின்னர் ஒரு பெண்ணிற்கு தலா ரூ.11,000 என பேசி ரூ.22,000 கொடுத்து, தனித்தனி அறைக்கு சென்றதும் தெரிந்தது. மேலும், கார்த்திகேயன் தன்னுடன் வந்த மாடல் அழகியிடம் ஒருமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர், மீண்டும் அந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்தபோது அவர் வர மறுத்துள்ளார். மேலும், நீங்கள் கொடுத்த பணத்திற்கு ஒருமுறை தான், ஒரு நாள் முழுவதும் கிடையாது என, அப்பெண் கறாராக கூறியுள்ளார்.
ஆனால், கார்த்திகேயன் அந்த பெண்ணை பலவந்தப்படுத்தியதாக தெரிகிறது. இதனால், அலறி துடித்து அவரிடம் இருந்து கழிவறைக்குள் ஒளிந்து கொண்டார். பின்னர், தான் ஆபத்தில் சிக்கியிருப்பதாக காவலன் செயலி மூலம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். வேளச்சேரி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 4 பேரையும் காவல்நிலையம் அழைத்து வந்தது தெரியவந்தது. மேலும், கார்த்திகேயன், ஒரு நாள் முழுவதற்கும் எனக்கூறி, ரூ.11000 வாங்கிக் கொண்டு, ஒரு முறைதான் என மாடல் அழகி ஏமாற்றுவதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பெண்களையும் மீட்டு, மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிக்கிய 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion