TN Rain: புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்... வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையத்தின் எச்சரிக்கை!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கனமழை எதிரொலியொட்டி பல்வேறு துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இன்று கன மழை பெறும் மாவட்டங்கள்:
டெல்டா மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர்,மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 19, 2022
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தெற்கு வங்க கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், பலத்த காற்றானது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், எண்ணூர், தூத்துக்குடி, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதிகளில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/KYPjSEb7vH
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 19, 2022
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 19, 2022
View this post on Instagram
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 19, 2022