(Source: ECI/ABP News/ABP Majha)
Video Abuse : ஐஐடி மாணவி குளிக்கும்போது, ஜன்னல் வழி வீடியோ எடுத்த கேண்டீன் ஊழியர் கைது..
மும்பை ஐஐடியில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை ரகசியமாக வீடியோ எடுத்ததாக கேண்டீன் ஊழியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பை ஐஐடியில் குளித்துக் கொண்டிருந்த மாணவியை ரகசியமாக வீடியோ எடுத்ததாக கேண்டீன் ஊழியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மாணவி ஞாயிற்றுக் கிழமை இரவில், மாணவி ஹாஸ்டலில் குளிக்கும்போது, ரகசியமாக அதே ஹாஸ்டலில் உள்ள கேண்டீனில் வேலை செய்பவர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இது தொடர்பாக ஐஐடி மாணவி காவல் துறையில் புகார் அளித்துள்ளதன் அடிப்படையில், 354சி பிரிவின் கீழ் காவல் துறையினர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதன் பின்னர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட கேண்டீன் ஊழியரை கைது செய்துள்ளனர்.
ஹாஸ்டல் எச் 10-இல் உள்ள குளியலறை ஒன்றில் ஜன்னல் ஓட்டைகள் வழியாக யாரோ தன்னைப் பதிவு செய்வதைக் கவனித்த மாணவி கூச்சலிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக விடுதி கவுன்சில் மற்றும் அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் மும்பை ஐஐடி அதிகாரிகள் கேண்டீன் ஊழியர்களின் மொபைலை சோதனை செய்துள்ளனர்.
இதன் பின்னர் இது குறித்து பேராசிரியர் தபனேந்து குண்டு கூறுகையில், " புகாருக்கு பின்னர் ஐஐடி நிர்வாகத்தால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளியில் இருந்து குளியலறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஹாஸ்டல் 10 ஆய்வுக்குப் பிறகு, தேவையான சிசிடிவி கேமராக்கள் மற்றும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், "இதுவரை இரவு கேன்டீனை ஆண் பணியாளர்கள் கேண்டீன் நடத்தி வந்தனர். தற்போது, ஹாஸ்டல் 10 குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கேண்டீன் மூடப்பட்டு, பெண் ஊழியர்களை மட்டுமே பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளோம்.
சமீபத்தில் சண்டிகரில் விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவரே சக மாணவிகள் குளிக்கும் போது வீடியோ எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் பரபரப்பை கிளப்பியது.
முன்னதாக, முதற்கட்ட விசாரணையில், பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவி, சக மாணவிகள் குளியலறையில் குளிக்கும்போது ரகசியாக வீடியோவாக எடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில், அவர் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அந்த மாணவி தான் குளிக்கும் வீடியோவை மட்டும்தான் தனது காதலனுக்கு அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மற்ற மாணவிகளின் வீடியோவை யாருக்கும் அனுப்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில், டாக்டர் பாவா என்பவர் அதிகாரப்பூர்வமாக ட்வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களில் 60 மாணவிகளின் குளியலைறை வீடியோ பரவியதாக கூறப்பட்டதில் உண்மை இல்லை என அவர் கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள மாணவியின் மொபைல் போன் தடயவியல் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மாணவி தான் குளிக்கும் வீடியோவை மட்டும் தான் தனது காதலனுக்கு அனுப்பியுள்ளார். மற்ற மாணவிகளில் வீடியோ வெளியில் கசியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதாக கூறப்பட்டிருப்பது ஆதாரமற்றது மற்றும் வதந்தியை யாரோ வேண்டும் என்றே பரப்புகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளின் பாதுகாப்பு குறித்து அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் அடுத்தடுத்து நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.