BJP Member Murder: சிவகங்கையில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை; 3 பேர் கைது... கொலையில் பகீர் பின்னணி!
சமீபகாலமாக தென்மாவட்டங்களில் பழிக்குப் பழியாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவங்கை மாவட்டம் கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஒப்பந்ததாரரும், பாஜக மீனவர் பிரிவு மாவட்டத் துணைத் தலைவருமான முத்துப்பாண்டி (45), சிவகங்கை மதுரை முக்கு நெல்மண்டி தெருவில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று வீட்டின் அருகேயுள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தபோது, முத்துப்பாண்டியை இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அருவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து சிவகங்கை டவுன் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், எஸ்.பி செந்தில்குமார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
காவல்துறை விசாரணையில், சிவகங்கை அருகே வைரவன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (29). இவர் கல்லுப்பட்டியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சிவகங்கை ஒன்றியச் செயலாளர் பொன்னுச்சாமியை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக இருந்தார். இந்தநிலையில் அந்த வழக்கில் கடந்த 2012 ஜூலை 9ஆம் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக மோட்டார் சைக்கிளில் செல்வம் வந்தபோது, சாமியார்பட்டி அருகே பழிக்குபழியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முத்துப்பாண்டி குற்றவாளியாக உள்ளார் .
இந்தநிலையில் செல்வம் கொலைக்கு பழிக்கு பழியாக முத்துப்பாண்டியை, செல்வம் உறவினர்கள் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய வைரவன்பட்டியைச் சேர்ந்த சுகுமார் (27), பால்பாண்டி (22), செல்வேந்திரன் (40) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
சமீபகாலமாக தென்மாவட்டங்களில் பழிக்குபழியாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் என்பவர் செங்குளம் அருகே குளக்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத கும்பலை சேர்ந்தவர்கள் மாரியப்பனை சரமாரியாக வெட்டி தலை மற்றும் ஒரு காலை துண்டித்து கொலை செய்தனர். துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துச்சென்று, 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் சங்கர சுப்பிரமணியன் என்பவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் போட்டுவிட்டு சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 8 பேர் பேரை போலீசார் கைது செய்தனர்.
பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட மாரியப்பன் கடந்த 2014 ஆம் ஆண்டு கணேசன் என்ற கார்த்திக் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பழிக்குப்பழியாக அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் முன்னீர்பள்ளம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மோதல்கள், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 8 மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
நெல்லையில் போலீஸ்காரர் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் - 3 பேர் கைது, 5 பேர் சரண்