(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: வகுப்பறையில் முத்தம்.. 3 மாதங்களில் 15 மாணவர்களிடம் பாலியல் அத்துமீறல்... அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது
உடற்கல்வி வகுப்புகள் மற்றும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர் தங்களை தகாத முறையில் தொட்டதாகவும், சிலரை முத்தமிட்டதாகவும் பள்ளி மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெங்களூருவில் 15க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பெங்களூரு, ஹெப்பாலில் உள்ள அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் 54 வயது ஆசிரியர் அஞ்சனப்பா. இவர் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 15 மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக முன்னதாக புகார்கள் வந்துள்ளன.
முன்னதாக இப்பள்ளியில் படிக்கும் எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியரின் தவறான அணுகுமுறை குறித்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து இந்தச் சம்பவம் வந்துள்ளதாக ஹெப்பல் காவல் ஆய்வாளர் திலீப் குமார் தெரிவித்துள்ளார்.
உடற்கல்வி வகுப்புகள் மற்றும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர் அஞ்சனப்பா தங்களைத் தகாத முறையில் தொட்டதாகவும், சிலரை முத்தமிட்டதாகவும் பள்ளி மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சூழலில் முன்னதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரை அணுகிய நிலையில், முதற்கட்டமாக தலைமை ஆசிரியர் இதுகுறித்து விசாரித்துள்ளார். அதில் ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை எனக் கண்டறியப்பட்டதையடுத்து, தலைமை ஆசிரியர் காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளார்.
“உடற்கல்வி ஆசிரியர் இரண்டு மூன்று மாதங்களாக மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவர்களின் பல புகார்களுக்கு மத்தியில், தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தி, இறுதியாக நவம்பர் 8ஆம் தேதி இரவு காவல்துறையை அணுகினார்”என்றும்ஹெப்பல் காவல் ஆய்வாளர் திலீப் குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் அஞ்சனப்பா போக்சோ மற்றும் சட்டப்பிரிவு 354இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்சோ சட்டம் :
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.
18 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக இந்த போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் குறித்த தகவல்கள் பின்வருமாறு:
- Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
- Aggravated penetrative sexual assault - தீவிரமான பாலியல் தாக்குதல்
- Sexual Assault - பாலியல் தொல்லை
- Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
- Sexual Harassment - பாலியல் தொந்தரவு
- Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்
இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.
- 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
- இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
- 12 வயதுக்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)