Boy Complaint Against Father: தாயை தாக்கிய தந்தை: 3 கி.மீ தூரம் நடந்தே சென்று காவல் நிலையத்தில் புகார் செய்த 12 வயது சிறுவன்
ஆக்ரா : மது போதையில் தாயை தாக்கிய தந்தை மீது 3 கிலோ மீட்டர் தூரம் காவல்நிலையத்திற்கு நடந்தே சென்று சிறுவன் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தன் தந்தை மது அறுந்தி விட்டு வந்த தன் தாயை தாக்குவதாக ஆக்ரா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் வெறுங்காலுடன் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பஹ் பிளாக்கின் ஜெப்ரா கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் 40 வயதான தன் தந்தை ஹரியோம் தனது தாயை இரும்புக் கம்பி மற்றும் பெல்டால் அடிப்பதாக பசோனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தான் அலுவகத்திற்கு வெளியே அமர்ந்திருந்த போது, காவல்நிலையம் நோக்கி விரைந்து வந்த சிறுவன் தன்னிடம் வந்து தன் தந்தை தனது தாயை இரும்புக் கம்பி மற்றும் பெல்ட்டால் அடிப்பதாக கூறினார். மேலும் தன் தந்தை மதுவுக்கு அடிமையானவர் என்றும் அவர் தன் அம்மாவை அடிக்கடி அடிப்பதாகவும் சிறுவன் புகார் அளித்தான்.
அந்த நபர் ஹரியோம் ஆக்ரா கிராமத்தில் உள்ள பஹ் என்ற இடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து ஹரியோம் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்ய முற்பட்ட போது, அவரின் மனைவி அவர் மீது புகாரளிக்க விரும்பாததால் போலீசார் அவரை அங்கேயே விட்டு விட்டு வந்ததாக கூறப்படுகிது. மேலும் இனி மனைவியை அடிக்க மாட்டேன் என அவர் உறுதி அளித்ததாகவும் தெரிகிறது.
தன் தந்தை மீது தைரியமாக புகார் அளித்த 12 வயது சிறுவனின் தைரியத்தை காவல்துறையினர், சிறுவனின் 70 வயது தாத்தா, கிராம மக்கள் உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டினர். தனியாக வந்து முழு சம்பவத்தையும் விவரித்து தன் தந்தை மீது புகார் அளித்த அந்த சிறுவனின் தைரியத்தை பார்த்து தான் ஆச்சர்யப்பட்டதாகவும், அவனது வயது சிறுவர்கள் காவல் நிலையம் வந்து புகார் அளிப்பதை அரிதாகவே காண முடிவதாகவும் காவல் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் படிக்க