Actor Rupaa Dutta: வரிசையாக பிக்பாக்கெட் அடித்த நடிகை.. திருடிய பணத்துக்கு ரெக்கார்ட் நோட்.. தட்டித்தூக்கிய காவல்துறை.. அதிர்ச்சியில் திரையுலகம்
புத்தகக்கண்காட்சியில் பணத்தை திருடிய பிரபல நடிகை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தக கண்காட்சியில் பணம் திருடிய குற்றத்திற்காக நடிகை ரூபா தத்தா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கொல்கத்தா புத்தகக் கண்காட்சிக்கு சென்ற நடிகை ரூபா தத்தா, அங்கிருந்து பணத்தை திருடியதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து போலீஸ் கூறும் போது, “ அவரது பேக்கில் இருந்து 65,760 ரூபாயை கைப்பற்றினோம். பணம் எப்படி வந்தது என்பதற்கான காரணத்தை அவரிடம் கேட்ட போது அதற்கான சரியான விளக்கத்தை அவர் கொடுக்க வில்லை.
தொடர்ந்து விசாரித்த போது கண்காட்சிக்குள் இருந்த கூட்டத்தை, பயன்படுத்தி பணம் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அவரது பேக்கை தொடர்ந்து சோதனை செய்து போது அதிலிருந்த ஒரு டைரியை நான் கைப்பற்றினோம். அந்த டைரியில் அவர் இதுவரை எவ்வளவு பணத்தை திருடியிருக்கிறார் என்பது தொடர்பான தகவல்கள் இருந்தன.” என்று கூறினர். மேலும் டைரியில்,கொல்கத்தாவில் உள்ள நெருக்கடியான இடங்களின் பெயர்கள் அடங்கியிருந்தன. இது ரூபா திருட வைத்திருக்கும் பொதுவான இடங்களாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தக கண்காட்சிக்குள் அவர் அங்கும் இங்கும் சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த சந்தேகத்தோடு அவரை சோதனை செய்த போது அவர் பேக்குகளை குப்பைத்தொட்டிக்குள் போட்டது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவரை பேக்கை சோதனை செய்த போது, அவருடைய பேக்கில் நிறைய பணம் இருந்த பைகள் இருப்பது. அதனை சோதனை செய்த போது, அதில் 65,760 ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவலர்கள், சட்டப்பிரிவு 379/411 கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் தத்தா கூறும் போது, “ தான் குடித்த குளிர்பான பாட்டிலை குப்பைத்தொட்டியில் போடும் போது, அந்தக்குப்பை தொட்டியில் பை கிடந்தது. அந்தப்பையை தூக்கும்போது, போலீஸார் என்னை கைது செய்தனர். போலீஸ் தேடிய பை என்னுடையது அல்ல. அது நான் குப்பைத்தொட்டியில் இருந்து தூக்கிய பை” என்று கூறினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
பெங்காலி நடிகையான ரூபா தத்தா பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் அவரது சோசியல் மீடியா தளங்களில் வங்க கர்னி சேனாவின் மாநிலத் தலைவர் என அவரை குறிப்பிட்டு இருக்கிறார். முன்னதாக, மீடுசர்ச்சையின் போது பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது இவர் பாலியல் புகார் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.