மேலும் அறிய

மயிலாடுதுறை அருகே முதியவரை அடித்து கொலை செய்த 5 பேர் கைது

மயிலாடுதுறை அருகே முதியவரை அடித்து கொலை செய்த 5 பேரை செம்பனார்கோயில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே கிள்ளியூர் ஊராட்சி ராமன் கோட்டகம் காலனி தெருவை சேர்ந்தவர் 70 வயதான சித்திரன். இவரது 15 வயது மகன் பிரகாஷ் என்பவர் திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 60 வயதான பிச்சைக்கண்ணு மற்றும் கலியபெருமாள் என்பவரின் 35 வயது மகன் பாலமுருகன் இவர்களுக்கும், சித்திரன் குடும்பத்திற்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

மயிலாடுதுறை அருகே முதியவரை அடித்து கொலை செய்த 5 பேர் கைது

Aditi Shankar: அழைப்பிதழோடு ரவுண்டடிக்கும் ஷங்கர்! அதிதிக்கு திருமணமா? அப்போ சினிமாவுக்கு டாட்டாவா??

இந்நிலையில்,  பிரகாஷ் பள்ளிக்கு செல்லாததால், நேற்று இரவு அவரது தந்தை சித்திரன் கடுமையான திட்டியுள்ளார். இதனைக் கேட்ட பிச்சைக்கண்ணு, அவரது மனைவி ஜெயலட்சுமி, பாலமுருகன், இவரது மனைவி காளியம்மாள் மற்றும் பிச்சைக்கண்ணு மருமகள் பிரியா ஆகிய 5 பேரும் சேர்ந்து தங்களை தான் சித்திரன் குடிபோதையில் திட்டுகிறார் என அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மயிலாடுதுறை அருகே முதியவரை அடித்து கொலை செய்த 5 பேர் கைது

Actress Losliya: உடம்புல இந்த சிக்கல் இருக்கு.. ஒல்லியானது குறித்து மனம் திறந்த லாஸ்லியா.. ஷாக்கில் ஃபேன்ஸ்..

இதனை தடுக்க வந்த சித்திரன் மனைவி அஞ்சம்மாள், மகன் பிரகாஷ் ஆகியோரையும் கடுமையான தாக்கியுள்ளனர். அப்போது பிச்சைக்கண்ணு, அங்கு கிடந்த மூங்கில் கட்டையை எடுத்து  சித்திரனை பலமாக அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்து நிலைகுலைந்து கீழே விழுந்த சித்திரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் சித்திரன் மனைவி, அவரது மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். 

மயிலாடுதுறை அருகே முதியவரை அடித்து கொலை செய்த 5 பேர் கைது

Rajakannappan: அவதூறு புகார் அளித்ததாக, பி.டி.ஓ. அதிகாரிக்கு ராஜகண்ணப்பன் தரப்பு கண்டனம்..

இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செம்பனார்கோயில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான காவல்துறையினர், கொலையான சித்திரன் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து பிச்சைக்கண்ணு, ஜெயலட்சுமி, பாலமுருகன், காளியம்மாள், பிரியா ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்கம்பக்கத்து வீட்டினர் பிரச்சினையில் 70 வயதான முதியவர் என்றும் பாராமல் ஐந்து பேர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Ak 61 : சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக இந்த கேரக்டரை ட்ரை பண்ணும் அஜித்! வெளியான Ak 61 புதிய அப்டேட்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?

Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்

TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?

Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!

ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க

"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்

Breaking News LIVE: அமித்ஷாவிற்கு எதிராக  தமிழ்நாட்டில் வலுக்கும்  போராட்டம்

Embed widget