![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rajakannappan: அவதூறு புகார் அளித்ததாக, பி.டி.ஓ. அதிகாரிக்கு ராஜகண்ணப்பன் தரப்பு கண்டனம்..
அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அவதூறு புகார் கூறியதாக கூறி பி.டி.ஓ. அதிகாரிக்கு ராஜகண்ணப்பன் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Rajakannappan: அவதூறு புகார் அளித்ததாக, பி.டி.ஓ. அதிகாரிக்கு ராஜகண்ணப்பன் தரப்பு கண்டனம்.. Rajakannappan Casteist Remark Minister Rajakannappan party condemned BDO Officer Rajakannappan: அவதூறு புகார் அளித்ததாக, பி.டி.ஓ. அதிகாரிக்கு ராஜகண்ணப்பன் தரப்பு கண்டனம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/30/e3e9a079e78ab09f638b6af3ae5d034d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ராஜகண்ணப்பன், போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரை சாதியை சொல்லி திட்டியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரது போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு அவர் பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அவதூறு புகார் கூறியதாக கூறி பி.டி.ஓ. அதிகாரிக்கு ராஜகண்ணப்பன் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விடுக்கப்பட்ட கண்டன அறிக்கையில், “போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொகுதி மக்களுக்காக அரும்பணி ஆற்றி வருகிறார்.
முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் இராஜேந்திரன், முதுகுளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் தர்மருடன் கூட்டு சேர்ந்து வளர்ச்சி திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள் அவர்களுக்கு செய்து தொடர்ந்து வருவது குறித்து வளர்ச்சி திட்டப்பணிகளில் பல்வேறு ஊழல்கள் செய்வது தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது. அமைச்சர் வட்டார வளர்ச்சி அலுவலரை அழைத்து தன்னுடைய தொகுதியில் தொடர்ந்து முறைகேடு செய்வதை ஆதாரத்துடன் தெரிவித்தார்.
பின்பு “உங்களை வேறு இடத்திற்கு மாறுதல் செய்து, துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்கள். தாம் மாறுதல் அடைந்து துறை ரீதியாக நடவடிக்கை ஏற்படும் என்று கருதிய BDO ராஜேந்திரன் அமைச்சர் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு பொய் செய்திகள் பத்திரிக்கை மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு பரப்பி வருகிறார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமைச்சரைப் பற்றி கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ஆதாரமற்ற அவதூறுகளை அமைச்சர் பற்றி தெரிவித்த BDO இராஜேந்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறந்த நிர்வாகமாக செயல்படும் இந்த அரசுக்கு குந்தகம் ஏற்படுத்தும் BDO இராஜேந்தின் அ.தி.மு.க சேர்மன் தர்மன் தூண்டுதலின் பேரில் இச்செயலில் ஈடுபடுகிறார் என்பது திட்டவட்டமாகத் தெரியவருகிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)