அதிகாலையிலே சோகம்! சாலையில் துடி துடித்து பறிபோன 3 உயிர் - வேலூரில் கோரம்
Vellore Accident: வேலூர் அருகே லாரி மீது ஜீப் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகே கருகம்புத்தூர் என்ற பகுதியில் அதிகாலையில் நடைபெற்ற கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 பேர் உயிரிழப்பு:
வேலூர் மாவட்டம் கருகம்புத்தூர் பகுதியில் லாரி மீதி ஜீப் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் மீது மோதிய பிறகு லாரி மீது ஜீப் மோதியதில் விபத்து உண்டானது. இந்த விபத்தில் ஜீப் உருக்குலைந்த நிலையில், மூவர் உயிரிழந்தனர். ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் சம்பவ இடத்தில் சென்று விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை நடத்திய விசாரணையில் அதிவேகமாக சென்றதால் இந்த விபத்து நடைபெற்றது என தெரிய வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.