கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபட்ட ஹேம்ஸ்டர் திடீர் மரணம்!
பால் என்கிற ஆக்டோபஸ் ஃபிஃபா உலகக் கோப்பையில் அப்படிப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.அதுபோல கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் மிஸ்டர் கோக்ஸ் என்னும் ஹேம்ஸ்டர் ஈடுபடுத்தப்பட்டது.
சர்வதேச நாடுகள் முழுவதும் கிரிப்டோ கரண்சியில் கவனம் செலுத்திவரும் காலம் இது. இந்த வர்த்தகத்தில் சிறிய துரும்பைக் கிள்ளிப் போட்டால் கூட சர்வதேச நாடுகள் கவனிக்கின்றன. இந்த வரிசையில் கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபட்ட மிஸ்டர் கோக்ஸ் என்னும் ஹேம்ஸ்டர் விலங்கு அண்மையில் இறந்தது அந்தத் துறையில் உள்ள அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த அந்த ஹேம்ஸ்டரை பராமரித்து வந்த நபர் ட்விட்டரில் தனது கவலையைப் பகிர்ந்துள்ளார். இந்த ஹேம்ஸ்டர் ஜெர்மனியைச் சேர்ந்தது.
Thank you and rest in peace, Max (a.k.a Mr. Goxx).
— Mr. Goxx (@mrgoxx) November 24, 2021
You will be missed, and your memory will live forever on the blockchain. pic.twitter.com/Nd5zRzKKFd
சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் கோப்பையை யார் வெல்வார்கள் என்பதைக் கணிப்பதற்கு ஆக்டோபஸ் மற்றும் மீன் ஆகியவை ஒருகாலத்தில் பயன்படுத்தப்பட்டன. பால் என்கிற ஆக்டோபஸ் ஃபிஃபா உலகக் கோப்பையில் அப்படிப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.அதுபோல கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் எந்த கிர்ப்டோகரன்சியில் முதலீடு செய்யலாம் எதில் வர்த்தகம் மேற்கொள்ளலாம் என்பதை மிஸ்டர் கோக்ஸ் என்னும் ஹேம்ஸ்டர் கடந்த ஜூன் மாதம் தொடங்கிக் கணித்து வந்தது. அதன் கூண்டு இதற்காகத் தனியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கூண்டில் வாங்குதல் விற்றல் போன்ற கூண்டுகள் தனித்தனியே வடிவமைக்கப்பட்டிருந்தன. கோக்ஸ் ஹேம்ஸ்டர் எந்தக் கூண்டைத் தொடுகிறதோ அதற்கு ஏற்றது போல அன்று வர்த்தகத்தில் அதன் பெயரில் கிரிப்டோ கரன்ஸி வர்த்தகம் மேற்கொள்ளப்படும். இதுவரை 19.7 சதவிகித கரியர் ஃபெர்மான்ஸ் கிராஃபை இந்த ஹேம்ஸ்டர் காண்பித்துள்ளது. கடைசியாக நவம்பர் 20 நிலவரப்படி 3299.4 ட்ரான் கிர்ப்டோ கரன்சி டோக்கன் வர்த்தகத்தில் இந்த ஹேம்ஸ்டர் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகத்தில் வாரன் ஃபட்டையே பின்னுக்குத் தள்ளிய இந்த ஹேம்ஸ்டர் குறித்து எலான் மஸ்க்கும் கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பரில் இந்த ஹேம்ஸ்டர் பற்றி கருத்து கூறியிருந்த எலான் மஸ்க் ‘அதற்கு வெறித்தனமான ஆற்றல் உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.
Hamster has mad skillz!!
— Elon Musk (@elonmusk) September 28, 2021
தற்போது இந்த ஹேம்ஸ்டர் இறந்ததை அடுத்து கிரிப்டோ கரன்ஸி வர்த்தக்கத்தில் ஈடுபட்டு வரும் பலர் மனக்கவலையை பகிர்ந்துள்ளனர்.