Share Market: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Share Market 02.01.2025: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமானது. எந்தெந்த துறைகள் என்ற விவரத்தை இங்கே காணலாம்.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகியது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,071.03 அல்லது 1.36% புள்ளிகள் உயர்ந்து 79,578.44 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 318.45 அல்லது 1.34% புள்ளிகள் உயர்ந்து 24,057.30 ஆகவும் வர்த்தகமாகியது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
பஜாஜ் ஃபின்சர்வ், ஈச்சர் மோட்டர்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், மாருதி சுசூகி, எம்&எம், இன்ஃபோசிஸ், ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஓ.என்.ஜி.சொ., டைட்டன் கம்பெனி, ஹெச்.சி.எல். டெக், கோடாக் மஹிந்த்ரா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.யு.எல்., ட்ரென்ட், ஹீரோ மோட்டர்கார்ப், பஜாஜ் ஆட்டோ, இந்தஸ்லேண்டு வங்கி, லார்சன், டி.சி.எஸ்., நெஸ்லே, பவர்கிரிட் காஃப், அப்பல்லொ மருத்துவமனை, ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல், டாடா மோட்டர்ஸ், டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா கான்ஸ் பராட், ஐ.டி.சி., டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல், ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சிப்ளா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, கோல் இந்தியா, விப்ரோ, அதானி எண்டர்பிரைசிஸ், ஹெ.டி,.எஃப்.சி. லைஃப்., ஹிண்டால்கோ, எஸ்.பி.ஐ., என்.டி.பி.சி. ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
பிரிட்டானியா, சன் ஃபார்மா, பி.பி.சி,எல். பாரத் எலக்ட்ரானிக், அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
நிஃப்டியை பொறுத்தவரையில் ஈச்சர் மோட்டர்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுசூகி, எம்&எம் ஆகியவை ஏற்றத்திலும் பி.பி.சி.எல்., சன் ஃபார்மா, BEL, அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவுடன் இருந்தது.
ஐ.டி. துறை, ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் ஏற்றம் கண்டன. பொதுத்துறை வங்களில் சரிவுடன் இருந்தன. இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு கார்ப்ரேட் லாபம் பெரிதாக இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் லாபம் தரும் துறைகளை தேர்வு செய்து கவனமுடன் முதலீட்டு செய்வதை சிறந்தது என்று நினைக்கின்றனர். ஐ.டி. ஃபார்மா, நிதி ஆகிய துறைகளில் வளர்ச்சியின் வேகம் சற்று குறைவாக இருக்கும். ஆனால், ஹோட்டல், நகைகள், விமான சேவைகள் ஆகிய துறைகளில் முதலீட்டு செய்தால் வளர்ச்சி கொஞ்சம் அதிகமாக கிடைக்கும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா குறைந்து 85.7625 ஆக இருந்த்து.