மேலும் அறிய
Share Market: வாரத்தின் முதல் நாளே சரிவுடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தை...சரிவில் அதானி போர்ட்ஸ், டிசிஎஸ்
மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளன.

பங்கு சந்தை நிலவரம்
வாரத்தின் தொடக்க நாளில் ( திங்கள் கிழமை ) இந்திய பங்கு சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது, முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பங்கு சந்தை நிலவரம்:
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 212 புள்ளிகள் சரிந்து 60, 472 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 48.20 புள்ளிகள் சரிந்து 17,804. 60 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
குறிப்பாக விப்ரோ, மாருதி சுசுகி, சிப்லா, அதானி போர்ட்ஸ், டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் தொடங்கியுள்ளன.
டைட்டான், சன் பார்மா, நெஸ்ட்லே, ஐடிசி, ஏசியன் பெண்ட்ஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















