Share Market : இரண்டு நாட்களுக்கு பின் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை...முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி...
Share Market : இந்திய பங்குச்சந்தையானது இன்று காலை ஏற்றத்தில் தொடங்கியுள்ளது..
Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி உள்ளது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 139.34 புள்ளிகள் உயர்ந்து 60,244.84 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 39.35 புள்ளிகள் குறைந்து 17,935.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இரண்டு நாட்கள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
Sensex climbs 139.34 points to 60,244.84 in early trade; Nifty advances 39.35 points to 17,935.05
— Press Trust of India (@PTI_News) January 12, 2023
லாபம்-நஷ்டம்
எச்சிஎல் டெக், டெட்டன் கம்பெணி, கோல் இந்தியா, கிராசிம், எம்எம்,லார்சன், நெஸ்டீலே, பிரிட்டானியா, மாருதி சுசிகி, இன்போசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், டிசிஎஸ், ஓஎன்ஜிசி, டெக் மகேந்திரா, ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், சிப்ளா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
ஹின்டல்கோ, டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, அப்போலோ மருத்துவமனை, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, பாரதி ஏர்டெல், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாகவே பங்குச்சந்தையானது கடும் சரிவில் இருந்தது. நேற்யை நிலவரப்படி இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்ஃடி 18 ஆயிரத்திற்கு கீழும் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு கவலை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இன்று காலை தொடங்கிய பங்குச்சந்தை நிலவரம் முதலீட்டாளர்களை ஆறுதல்படுத்தும்படி இருந்தது.
ரூபாயின் மதிப்பு:
Rupee rises 14 paise to 81.54 against US dollar in early trade
— Press Trust of India (@PTI_News) January 12, 2023
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 81.54 ரூபாயாக உள்ளது.