RBI Asks Banks: அதானி நிறுவனத்துக்கு வழங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் தகவல்களை கேட்கும் ரிசர்வ் வங்கி
அதானி குழும நிறுவனங்களின் மீது தொடர்புடைய விவரங்களை வங்கிகளிடம் இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதானி குழுமத்தின் பங்கு சந்தை மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அதானி குழும நிறுவனங்களுடன் தொடர்பு கொண்ட விவரங்களை அனைத்து வங்கிகளிடம் இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சரியும் அதானி பங்குகள்:
கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை கண்டன. அதானி குழுமத்தின் பங்கு சந்தை மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ரூ.20 ஆயிரம் கோடி நிதி திரட்டலுக்கான எஃப்.பி.ஓ. முறையில் பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை, அதானி குழுமம் நிறுத்தியது.
இது தொடர்பாக வீடியோ மூலம், அந்த குழுமத்தின் தலைவர் கவுதாம் அதானி விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, ”இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை எனது முதலீட்டாளர்களின் நலனே முதன்மையானது. மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சம் தான். பங்கு விற்பனை ரத்து முடிவு நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பங்கு விற்பனையை சரியான நேரத்தில் மீண்டும் செயல்படுத்துவோம். பங்கு சந்தைகளில் காணப்படும் ஏற்ற இறக்கத்தால், எஃப்.பி.ஓ.வை தொடர்வது சரியானது அல்ல என முடிவெடுத்தோம்” என விளக்கமளித்துள்ளார்
ரூ.20,000 கோடி நிதி திரட்டும் முடிவு வாபஸ்
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மூலதனம் திரட்டும் நோக்கில், எஃப்.பி.ஓ மூலம் பங்குகளை வெளியிடும் திட்டத்தை தொடங்கியது. ஆனால், எதிர்பார்த்ததை காட்டிலும் மந்தமாகவே அந்த நிறுவனத்தின் பங்குகள் விற்பனையாகின. இதையடுத்து ரூ.20 ஆயிரம் கோடி மூலதனத்தை திரட்டும் நோக்கிலான, எஃப்.பி.ஓ பங்குகளை விற்பனை செய்யும் முடிவை திரும்பப் பெறுவதாகவும், ஏற்கனவே அந்த பங்குகளை வாங்குவதற்கான பணத்தை செலுத்தியவர்களுக்கு, அவர்களுக்கான பணம் திருப்பி வழங்கப்படும் என்றும், அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல்களை கோரும் ரிசர்வ் வங்கி:
இதையடுத்து, இந்த வார தொடக்கத்தில் உலகின் டாப் 3 பணக்காரர்களில் ஒருவராக இருந்த இந்தியாவின் அதானி, பங்கு சந்தையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியின் காரணமாக,15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
India's central bank (Reserve Bank of India) has asked local banks for details of their exposure to the Adani group of companies, government and banking sources, reports Reuters pic.twitter.com/EHxDfVNmhD
— ANI (@ANI) February 2, 2023
இந்நிலையில், அதானி குழும நிறுவனங்களின் மீது செய்யப்பட்ட முதலீடுகள், கடன்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு, வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.





















