மேலும் அறிய
Advertisement
மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை
தொடர்ந்து உச்சத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த 23 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி ஒரே விலையில் நீடித்து வருகிறது.
கடந்த மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாத பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஊடரங்கு தளர்விற்கு பின் விலையை ஏற்றி வருகின்றனர். சதம் அடிக்கும் என விமர்ச்சிக்கும் அளவிற்கு பெட்ரோல் விலை உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், டீசல் விலையும் அதை விரட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது. இதனால் எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளான பெட்ரோல், டீசல் விலை கடந்த 23 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி ஒரே விலையில் தொடர்கிறது.
சென்னையில் நேற்று லிட்டர் ரூ.93.11க்கு விற்கப்பட்ட பெட்ரோல் மற்றும் ரூ.86.45க்கு விற்கப்பட்ட டீசல் விலை அப்படியே இன்றும் தொடர்கிறது. இன்னும் சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என பொருளாதா வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
க்ரைம்
க்ரைம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion