Paytm: பெருமூச்சு விட்ட மக்கள்! பேடிஎம் பேமெண்ட் சேவையை நிறுத்த கூடுதல் அவகாசம் - எத்தனை நாட்கள் தெரியுமா?
பிப்ரவரி 29ஆம் தேதியுடன் பேடிஎம் வங்கி சேவையை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய நிதி பரிமாற்ற தளமான பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. பேடிஎம் வங்கி விதிமுறைகளி மீறி பணப் பரிமாற்றம் செய்தது என பல குற்றச்சாட்டுகள் எழுந்தது.
பேடிஎம் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட ஆர்பிஐ:
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறை பேடிஎம் பேபெண்ட்ஸ் வங்கியிடம் விசாரணையை நடத்தி வருகிறது. அதே நேரத்தில், பேடிஎம் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்திருக்கிறது. Paytm-இன் தாய் நிறுவனமான One97 Communications Ltd மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் பேமன்ட் வங்கியில் பணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்துவதற்கு வரும் 29ஆம் தேதி முதல் தடை விதித்திருந்தது ரிசர்வ் வங்கி. இந்த அறிவிப்பை அடுத்து, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பேடிஎம் வாலெட், பேடிஎம் பாஸ்டேக், பேடிஎம் என்எம்டிசி கார்டுகள் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது என்பதால் வாடிக்கையாளர்கள் வேறு தளங்களுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதே வேளையில், பேடிஎம் வங்கி செயல்பாட்டிற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததை தொடர்ந்து பங்குச்சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்து வருகின்றன.
கூடுதல் அவகாசம் வழங்கிய ஆர்பிஐ:
இந்த நிலையில், பேடிஎம் பேமன்ட் வங்கியில் பணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்துவதற்கு வரும் 29ஆம் தேதி முதல் தடை விதித்திருந்த நிலையில், தற்போது அதன் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 15ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Paytm issue | RBI gives 15-day relaxation to Paytm, extends the date to 15th March from the earlier stipulated timeline of February 29, 2024. RBI issues FAQ in the Paytm case. pic.twitter.com/D61arOWdAD
— ANI (@ANI) February 16, 2024
டெபாசிட்கள், வாலட், ஃபாஸ்டேக்குகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளை நிறுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 15ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் எதுவும் தளர்த்தப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் என்னென்ன?
வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் மேலும் டெபாசிட் செய்யவோ, பண பரிமாற்றம் செய்யவோ, டாப் அப் செய்யவோ அனுமதிக்கப்படாது. ஆனால், சேமிப்பு வங்கி கணக்குகள், நடப்புக் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் ஏற்கனவே இருக்கும் பணத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் UPI வசதியை பயன்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.