Gram Suraksha Plan: முதலீடு 1500 தான்.. ஆனா வருமானம் 35 லட்சம்.. தபால் நிலையத்தின் தரமான திட்டம்.. முழுவிபரம் உள்ளே..!
அஞ்சல் அலுவலகத்தில் கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்து இதன் பயனை முதலீட்டாளர் பெற முடியும்.
இந்தியாவின் கிராமப்புற மக்களின் நலன் கருதி கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு கொள்கை கடந்த 1995 ஆம் தொடங்கப்பட்டது. கிராம புறமக்களுக்கு காப்பீடு வழங்குவதும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பெண் தொழிலாளர்களை பயன்பெறுவதும், அங்குள்ள மக்களுக்கு காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
கிராம் சுரக்ஷா யோஜனா
அஞ்சல் அலுவலகத்தில் கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்து இதன் பயனை முதலீட்டாளர் பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர் மாதம் தோறும் 1,500 டெபாசிட் செய்யும் பட்சத்தில், அவர் 35 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் 19 வயது முதல் 55 வயதுக்குட்ப்பட்ட குடிமக்கள் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தின் குறைந்த பட்ச காப்பீட்டுத் தொகை 10,000 ஆகும். முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் கிராம் சுரக்ஷா திட்டத்தின் கீழ் 10 லட்சம் வரையிலான எந்தத் தொகையையும் தேர்வு செய்ய முடியும். முதலீட்டாளர் 80 வயதை அடையும் போது, அவருக்கு முதிர்வு தொகையோடு போனஸூம் வழங்கப்படும்.
கிராம் சுரக்ஷா திட்டத்தின் பிரீமியம் தொகையை ஒவ்வொரு மாதமோ அல்லது காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர அடிப்படையிலோ செலுத்தலாம். பிரீமியம் தொகையை செலுத்தாத பட்சத்தில் இத்திட்டத்தை திரும்பவும் தொடங்குவதற்கு பாக்கித் தொகை முழுவதையும் செலுத்த வேண்டியிருக்கும்.
19 வயதில் கிராம சுரக்ஷா திட்டத்தின் கீழ் 10 லட்சம் முதலீடு செய்தால்,55 ஆண்டுகளுக்கு மாத பீரிமியம் தொகை 1,515 ஆகவும் 58 ஆண்டுகளுக்கு ரூ.1,463 ஆகவும், 60 ஆண்டுகளுக்கு ரூ.1,411 ஆகவும் அமையும். அதன் படி முதலிட்டாளர் 55 ஆண்டுகளுக்கு ரூ. 31.60 லட்சமும், 58 ஆண்டுகளுக்கு 33.40 லட்சமும் 60 ஆண்டுகளுக்கு ரூ.34.60 லட்சமும் என முதிர்வு தொகைகளை பெற முடியும்.
3 ஆண்டுகளுக்கு முதலீட்டாளர் பாலிசி ஒப்படைக்கும் வசதி இருந்தாலும், அதனை செய்யும் பட்சத்தில் கிராம் சுரக்ஷா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எந்தப் பலன்களையும் வாடிக்கையாளர் அடைய முடியாது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்