Hindenburg: அதானியை கதறவிட்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் - மொத்தமாக இழுத்து மூடப்படுவதாக அறிவிப்பு, காரணம் என்ன?
Hindenburg Adani: ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை இழுத்து மூடுவதாக, அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.
Hindenburg Adani: ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகள், இந்திய தொழிலதிபர் அதானிக்கு பல லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஹிண்டன்பர்க் அறிவிப்பு:
குறுகிய விற்பனைக்கு பெயர் பெற்ற அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், கலைக்கப்படுவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். இதுதொடர்பான் அறிக்கைய்ல், "கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து நான் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எங்கள் குழுவுடன் பகிர்ந்து கொண்டபடி, ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பை கலைக்க முடிவு செய்துள்ளேன். நாங்கள் வேலை செய்து கொண்டிருந்த யோசனைகளின் பைப்லைனை நாங்கள் முடித்த பிறகு திட்டத்தை முடிக்க வேண்டும். கடைசியாக போன்சி வழக்குகளை நாங்கள் முடித்து, கட்டுப்பாட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்” என நேட் ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
மூடப்படுவதற்கான காரணம் என்ன?
கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பை மூடுவதற்கான காரணம் என்ன? என்ற கேள்விக்கு? “வாழ்நாளின் சாகசத்தை போன்ற உணர்ந்த இந்த நாட்களை, ஒரு காதல் கதையாகப் பார்க்கிறேன். அப்படியானால், இப்போது ஏன் கலைக்க வேண்டும்? ஒரு குறிப்பிட்ட விஷயம் இல்லை-குறிப்பிட்ட அச்சுறுத்தல் இல்லை, உடல்நலப் பிரச்சினை இல்லை மற்றும் பெரிய தனிப்பட்ட பிரச்சினை இல்லை.
குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு ஒரு வெற்றிகரமான வாழ்க்கை சுயநலமாக மாறும் என்று ஒருவர் என்னிடம் கூறினார். ஆரம்பத்தில், எனக்கே நான் சில விஷயங்களை நிரூபிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். நான் இப்போது இறுதியாக என்னுடன் கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன், அநேகமாக என் வாழ்க்கையில் முதல்முறையாக.
நான் என்னை அனுமதித்திருந்தால், நான் அதை முழுவதுமாக அனுபவித்திருக்கலாம். ஆனால் நான் முதலில் என்னை நரகத்திற்கு ஆளாக்க வேண்டியிருந்தது. இந்த பணியில் நான் செலுத்திய தீவிரமும் கவனமும் உலகின் பிற பகுதிகளையும் நான் விரும்பும் நபர்களையும் கவனிக்க முடியாமல் செய்தது. நான் இப்போது ஹிண்டன்பர்க்கை என் வாழ்க்கையின் ஒரு அத்தியாயமாகப் பார்க்கிறேன், என்னை வரையறுக்கும் ஒரு மைய விஷயமாக அல்ல” என நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.
அதானிக்கு பேரிழப்பு
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியானது அதானி குழுமத்தை குறிவைத்து 2023 ஆம் ஆண்டு முழுவதும் பல அறிக்கைகளை வெளியிட்டது. இதன் காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மதிப்பில் பெரும் பகுதி அழிக்கப்பட்டது. பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் தீவிரத்தன்மை இருந்தபோதிலும், அதானி மற்றும் அவரது நிறுவனங்கள் தங்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருகின்றன. இதுதொடர்பான பல வழக்குகளும் நிலுவயில் இருப்பது குறிப்பிடத்தக்கது.