Gold Silver Rate Jan.23rd: எப்படி ஏமாத்துன பாத்தியா.! நேற்று குறைந்து இன்று டபுளாக உயர்ந்த தங்கம் விலை; வெள்ளியும் எகிறியது
தங்கத்தின் விலை நேற்று குறைவதுபோல் குறைந்து, இன்று டபுளாக எகிறியுள்ளது. சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் கிராமிற்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 1,700 ரூபாய்க்கும் மேல் குறைந்த நிலையில், இன்று இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அதாவது சவரனுக்கு 3,600 ரூபாய் உயர்ந்துள்ளது. மறுபுறம் வெள்ளி விலையும் தாறுமாறாக எகிறியுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை என்ன என்பதை பார்ப்போம்.
மக்களை ஏமாற்றிவரும் தங்கம்
இந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 19-ம் தேதி அதிரடியாக விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் 13,450 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,07,600 ரூபாயாகவும் எகிறிது. தொடர்ந்து, 20-ம் தேதி ஒரே நாளில், தங்கத்தின் வலை 3,600 ரூபாய் அதிகரித்து பேரதிர்ச்சி அளித்தது. காலையில் சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,08,880 ரூபாய்க்கும், ஒரு கிராம் 160 ரூபாய் விலை உயர்ந்து 13,610 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில், மாலையில் அதிரடியாக கிராமிற்கு மேலும் 290 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,900 ரூபாய்க்கும், சவரனுக்கு மேலும் 2,320 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,11,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த சூழலில், 21-ம் தேதியும் காலையிலேயே சவரனுக்கு மேலும் 2,800 ரூபாய் அதிகரித்து ஷாக் கொடுத்தது. அதன்படி, கிராமிற்கு 350 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்தை கடந்து, 14,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 1,14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், பிற்பகலில் மீண்டும் விலை உயர்ந்து வரலாற்று உச்சத்தை எட்டியது தங்கத்தின் விலை. அதன்படி, கிராமிற்கு மேலும் 165 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,415 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,320 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,15,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 22-ம் தேதியான நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, கிராமிற்கு 215 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்று சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்த தங்கம்
நேற்று விலை குறைந்ததே என பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்த நிலையில், இன்று இரட்டிப்பாக, அதாவது சவரனுக்கு 3,600 ரூபாய் விலை உயர்ந்த அதிர்ச்சி அளித்துள்ளது. அதன்படி, இன்று கிராமிற்கு 450 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,17,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிராமிற்கு ரூ.20 எகிறிய வெள்ளி
இதேபோல், வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்க நாளில், அதாவது 19-ம் தேதி 8 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 318 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், வெள்ளியின் விலை 20-ம் தேதி காலையில் கிராமிற்கு 12 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில், மாலையில் கிராமிற்கு மேலும் 10 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 340 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்த சூழலில், 21-ம் தேதி பிற்பகலில் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 345 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, 22-ம் தேதியான நேற்று 5 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் மீண்டும் 340 ரூபாயானது.
இந்நிலையில், இன்று அதிரடியாக கிராமிற்கு 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் 360 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்ற உச்ச விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.





















