Gold Rate Hike: வெந்த புண்ணுல வேல் பாய்ஞ்சுடுச்சே.!! மேலும் உயர்ந்த தங்கம் விலை...
ஏற்கனவே 60,000 ரூபாயை கடந்து உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை மேலும் உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதில், பெரும்பாலும் ஏறுமுகம்தான். அதிக அளவில் விலை எற்றுவது, சிறிய அளவு குறைப்பது, மீண்டும் அதிக அளவில் ஏற்றுவது என்று, தற்போது 60 ஆயிரம் ரூபாயை கடக்க வைத்துள்ளார்கள். இப்படி, வெந்த புண்ணுல வேல் பாய்ஞ்சுடுச்சே என்று சொல்வது போல, ஏற்கனவே 60 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகிவந்த தங்கம் விலை, தேற்போது மேலும் உயர்ந்துள்ளது.
சவரனுக்கு ரூ.240 உயர்ந்த தங்கம் விலை
2025-ம் ஆண்டு பிறந்ததிலிருந்து பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்த தங்கம் விலை, மெல்ல மெல்ல 60 ஆயிரம் ரூபாயை நெருங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 21-ம் தேதி 59,600 ரூபாயாக இருந்த தங்கம் விலை, கடந்த 22-ம் தேதி சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து, 60 ஆயிரம் ரூபாயை கடந்து 60,200 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு, 23-ம் தேதி, அதாவது நேற்று ஒருநாள் அதே விலையில் நீடித்த தங்கம் விலை, இன்று(24.01.25) கிராமுக்கு 30 ரூபாயும், சவரனுக்கு 240 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 7,555 ரூபாயாகவும், ஒரு சவரன் 60,440 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்வு
இதேபோல் வெள்ளி விலையும் இன்று கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 17-ம் தேதி ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 1,04,000 ரூபாயாகவும் இருந்தது. அதன்பிறகு, நேற்று(23.01.25) வரை அதே விலையில் நீடித்த வெள்ளியின் விலை, இன்று கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 105 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 1,05,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்துகொண்டே வருவது, பொதுமக்கள் மற்றும் கல்யாண வீட்டாரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

