இன்று என்னவெல்லாம் ஏறுமோ? தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்தது

பெட்ரோல் விலையை தொடர்ந்து தங்கம் விலையும் இன்று ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று 240 ரூபாய் அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதமாக தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் காணப்பட்டு வந்த நிலையில், நேற்று ஏறத்தொடங்கிய தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. 

சென்னையில் நேற்று  22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,422க்கும், சவரன் ரூ.35,376-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.30 அதிகரித்து ரூ.4,452க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 35,616 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,811க்கும், சவரன் ரூ.38,488க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.80 குறைந்து ரூ.75.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி ரூ.1,800 குறைந்து ரூ.75,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று என்னவெல்லாம் ஏறுமோ? தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்தது

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து, ரூ.35,450க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 உயர்ந்து, ரூ.4,432- க்கு விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் மூதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும். ஏனென்றால்,  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே என்று கூறினார்.

கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார்.

Tags: chennai silver gold price gold price increased

தொடர்புடைய செய்திகள்

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Petrol and diesel prices Today: ‛மறுபடியும் 2.50...’ 2வது நாளாக உயரந்த பெட்ரோல், டீசல் விலை!

Petrol and diesel prices Today: ‛மறுபடியும் 2.50...’ 2வது நாளாக உயரந்த பெட்ரோல், டீசல் விலை!

SBI Online Fraud | ஆன்லைன் மோசடி: எச்சரிக்கும் எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் வங்கிகள் !

SBI Online Fraud | ஆன்லைன் மோசடி: எச்சரிக்கும் எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் வங்கிகள் !

Gold Silver Price Today: ‛ஓட ஓட ஓட தூரம் குறையல... இன்னைக்கு தங்கம் குறையல’

Gold Silver Price Today: ‛ஓட ஓட ஓட தூரம் குறையல... இன்னைக்கு தங்கம் குறையல’

Petrol and diesel prices Today: ரூ.97யை கடந்தது பெட்ரோல் விலை!

Petrol and diesel prices Today: ரூ.97யை கடந்தது பெட்ரோல் விலை!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 14 மண்டலங்களில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் 1000க்கும் கீழ் குறைந்தது

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் 14 மண்டலங்களில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் 1000க்கும் கீழ் குறைந்தது

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!