மேலும் அறிய

Gold Price Hike : 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு விண்ணை முட்டிய தங்கத்தின் விலை.. 10 கிராமின் விலை இவ்வளவா?

இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்து, 10 கிராம் ரூ.55,000-க்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

5 மாதங்களில் இல்லாத உச்சம்:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 232 உயர்ந்து  ரூ. 40,360  ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 29 உயர்ந்து  ரூ.5,045 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 43,344  ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,418  ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தொடர்ந்து தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், தற்போது ஒரே அடியாக கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது சென்னையில் 10 கிராம் தங்கம், ரூ.55,710-ற்கு விற்பனை ஆகி வருகிறது. முன்னதாக இந்தியாவில் ஃபியூச்சர் தங்கத்தின் விலை முதன்முறையாக கடந்த ஜுலை மாதம் ரூ.50,000-த்தை கடந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை உயர காரணம்:

உலகிலேயே தங்கத்தை அதிகம் பயன்படுத்தக்கூடிய நாடான, சீனாவில் வார இறுதி நாட்களில் பின்பற்றப்பட்டு வந்த கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சீனாவில் தங்கத்தின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால், ஒரே அடியாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக துறைசார் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ததும் இதற்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை, இந்திய சந்தையில் ரூ.3,000 உயர்ந்துள்ளது. 

வெள்ளி விலை நிலவரம்:

இதனிடையே, சென்னையில் வெள்ளி விலை ஒரு ரூபாய் 90 காசுகள் உயர்ந்து ரூ. 72.50 ஆக விற்பனையாகிறது.  பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.72,500ஆக விற்பனையாகிறது.

தங்க ஆபரணங்கள்:

இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால்தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.

சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.

அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது.

தங்கம் ஒரு சிறு சேமிப்புத் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தால், ஒரு நாளில் அது பெரிய தொகையாக நமக்கு கிடைக்கும். பணமாக சேர்த்து வைத்தால், நாம் செலவு செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம், நகைச் சீட்டு என்றால் அவ்வாறு ஆகாது. இல்லையா? தங்கம் மிகப்பெரிய முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்க சேமிக்க தொடங்கியாச்சா? உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.

தங்க சேமிப்பு திட்டங்கள் : 

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் தங்கத்தை வாங்கும் நபர்களால் தங்க சேமிப்பு திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நகைக்கடைக்காரர்கள் பொதுவாக இதுபோன்ற திட்டத்தில் கடைசி தவணை செலுத்துவார்கள்.

டிஜிட்டல் தங்கம்:

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வடிவங்களில் வாங்கலாம். 

தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFகள்) :

ப.ப.வ.நிதி என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை உள்ளடக்கியது. அதன் மதிப்பு தூய தங்கத்தால் கணிக்கப்படுகிறது. அதன் மதிப்பு தற்போதைய தங்கத்தின் விலை மற்றும் தங்கத்தின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. 

தங்கக் குவிப்புத் திட்டம் :

Paytm மற்றும் Phonepe போன்ற மொபைல் வாலட்டுகள், வாடிக்கையாளர்களை மாதாந்திர முதலீட்டில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கத்தை சேமிக்கவும் அனுமதிக்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?VJ Chitra Father Suicide | மீள முடியாத சோகம்..VJ சித்ரா தந்தை தற்கொலை! துப்பட்டாவில் பிரிந்த உயிர்..Kumbakonam Mayor Chest Pain | ’’ஐயோ..நெஞ்சு வலி’’சுத்துப்போட்ட கவுன்சிலர்கள்..தரையில் புரண்ட மேயர்TTV Dhinakaran : ’’EPS-க்கு முதல் எதிரி நான்தான்!அதிமுக முழுக்க SLEEPER CELLS’’ - டிடிவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Embed widget